HOME»NEWS»ENTERTAINMENT»dhanush changes his bio on twitter as asuran actor scs

ட்விட்டரில் அசுரனாக மாறிய தனுஷ் - ஈஸ்வரனுக்கு பதிலடியா?

ஈஸ்வரன் படத்தில், “நீ அழிப்பதற்கு வந்த அசுரன்னா, நான் காக்குறதுக்கு வந்த ஈஸ்வரன்” என்று சிம்பு பேசும் வசனம் பேசும் ஒரு காட்சி இடம் பெற்றது.

ட்விட்டரில் அசுரனாக மாறிய தனுஷ் - ஈஸ்வரனுக்கு பதிலடியா?
நடிகர் தனுஷ்
  • Share this:

தனது பயோவை ட்விட்டரில் அசுரன் / நடிகர் என மாற்றியுள்ளார் தனுஷ்.

நடிகர் சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு ’ஈஸ்வரன்’ படம் வெளியானது. அந்தப் படத்தில், “நீ அழிப்பதற்கு வந்த அசுரன்னா, நான் காக்குறதுக்கு வந்த ஈஸ்வரன்” என்று சிம்பு பேசும் வசனம் பேசும் ஒரு காட்சி இடம் பெற்றது.

இந்தக் காட்சியைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள், அவரை வம்புக்கு இழுப்பதற்காக வேண்டுமென்றே இந்தக் காட்சி இடம்பெற்றிருப்பதாகக் கூறினர். இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



Dhanush Changes His bio on twitter as Asuran
தனுஷ் ட்விட்டர் பயோ


இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பயோவில் Asuran / Actor என்று மாற்றியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், சிம்புவின் அந்த வசனத்துக்கு பதிலடி தரும் விதமாக தான், தனது பயோவை மாற்றியிருக்கிறார் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்தனர். இதையடுத்து ட்விட்டரில், Asuran Dhanush என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆனது.

தவிர வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் தனுஷ். ‘நடிப்பு அசுரன் தனுஷ்’ என்ற எண்ணத்தை அந்தப் படம் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: