முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தனுஷின் ’அசுரன்’ டீசர் அப்டேட்!

தனுஷின் ’அசுரன்’ டீசர் அப்டேட்!

அசுரன் படத்தில் நடிகர் தனுஷ்

அசுரன் படத்தில் நடிகர் தனுஷ்

அசுரன் படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதத்துடன் முடித்துவிட படக்குழு முடிவு செய்துள்ளது.

  • Last Updated :

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தின் டீசர் தனுஷ் பிறந்தநாளன்று வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

‘வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து தனுஷுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். ‘அசுரன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி  வரும் ‘அசுரன்’ படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பை அடுத்த மாதத்துடன் முடித்துவிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் படத்தின் டீசரை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசுரன் படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதத்துடன் முடித்துவிட்டு துரை செந்தில்குமார் படத்தின் படப்பிடிப்புகளில் உடனடியாக இறங்குகிறார் நடிகர் தனுஷ்.

Also Watch

top videos

    First published:

    Tags: Asuran, Dhanush