தாஜ்மஹாலில் நடக்கும் தனுஷ் பட ஷூட்டிங்

தனுஷ்

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தாஜ்மஹாலில் நடைபெற்று வருகிறது.

  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ஏற்கெனவே ராஞ்சனா, சமிதாப் ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மூன்றாவதாக மீண்டும் ராஞ்சனா பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் ‘Atrangi Re’ என்ற படத்தில் இணைந்தார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் தனுஷ் உடன் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபர் மாதத்தில் மதுரையில் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நவம்பர் மாதத்தில் டெல்லியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தனுஷ் தனது ஷோஷியல் மீடியா பதிவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படக்குழு தற்போது தாஜ்மஹாலில் அக்‌ஷய்குமார், சாரா அலிகான், தனுஷ் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறது. இதனை தனுஷ், அக்‌ஷய்குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் தங்களது இன்ஸ்டாகிராம் பதிவுகளில் உறுதிப்படுத்தியுள்ளனர்.



 




View this post on Instagram





 

A post shared by Dhanush (@dhanushkraja)






அத்ரங்கி ரே படத்தை முடித்த பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ளார். முன்னதாக தனுஷுன் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில் அடுத்ததாக ‘கர்ணன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: