தனுஷின் 44 வது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்.. படத்தில் இத்தனை ஹீரோயினா?

தனுஷ்

தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

 • Share this:
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படத்தில் நடிக்கிறார் தனுஷ். ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. சேகர் கம்முலா, செல்வராகவன், ராம்குமார், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் என தனுஷை வைத்து படம் இயக்கப் போகிறவர்களின் எண்ணிக்கை நீண்டு செல்கிறது. ஆனால், தனுஷின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது இவர்கள் யாருமில்லை. வேறு யார்?

  மித்ரன் ஜவஹர். தனுஷை வைத்து உத்தமபுத்திரன், குட்டி, யாரடி நீ மோகினி படங்களை இயக்கியவர். இவர் இயக்கும் படம்தான் தனுஷின் 44 வது படமாக தயாராகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. செல்வராகவன் உள்பட பலரை முந்திக் கொண்டு மித்ரன் ஜவஹர் முதலிடம் பிடித்ததற்கு சன் பிக்சர்ஸ் முக்கிய காரணம்

  AlsoRead: பகத் பாசிலுக்கே சவாலாக அமைந்த படம் எது தெரியுமா?

  தற்போது ரஜினி நடிப்பில் அண்ணாத்த, விஜய் நடிப்பில் பீஸ்ட், சூர்யாவின் 40 வது படம் என முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ். சிவகார்த்திகேயன் நடிப்பில் ஐந்து படங்களை தயாரிப்பதற்கு சன் பிக்சர்ஸ் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தகவல். இந்த மாஸ் தயாரிப்பில் தனுஷும் இணைகிறார்.

  மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு மூன்று ஜோடிகள். நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் மற்றும் ஹன்சிகா. விரைவில் படம் குறித்த அதிக விவரங்களை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: