தேவர் மகன் 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்!

news18
Updated: October 12, 2018, 10:14 PM IST
தேவர் மகன் 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்!
கமல்ஹாசன்
news18
Updated: October 12, 2018, 10:14 PM IST
`இந்தியன் 2’ முடிந்தவுடன் ‘தேவர் மகன் 2’ வேலைகள் தொடங்கப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய தேவர் மகன் படத்தை இயக்குநர் பரதன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். அப்போது வெளியான இந்தப் படம் பயங்கர ஹிட் அடித்தது.

இந்தப் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் `போற்றிப் பாடடி பெண்ணே’, `வானம் தொட்டு போனா’, `அட புதியது பிறந்தது’, `இஞ்சி இடுப்பழகி’ போன்ற இனிமையான பாடல்களும் இடம்பெற்றன.

கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான படம் `விஸ்வரூபம் 2’. தற்போது, கமல்ஹாசன் கைவசம் `இந்தியன் 2’ மற்றும் ‘சபாஷ் நாயுடு’ ஆகிய 2 படங்கள் உள்ளன.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தேவர் மகன் 2-ம் பாகம் உருவாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அவர் அறிவித்த சில நிமிடங்களில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இச்செய்தி இடம்பெற்றது. அவரது ரசிகர்கள் பலரும் அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

First published: October 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...