மார்டன் டிரஸ்ஸில் கலக்கும் ’வில்லி காயத்திரி’... ரசிகர்கள் வியப்பு!

ரேகா

சீரியல் பார்க்கும் குடும்ப பெண்களாக இருந்தால் கண்டிப்பாக தெய்வ மகள் சீரியல் காயத்திரியை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

  • Share this:
தெய்வ மகள் சீரியலில் அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்த ‘காயத்திரி’யின் நிஜப்பெயர் ’ரேகா குமார்’. ஆனால் அவரின் உண்மையான பெயர் ரசிகர்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரேகா குமாரை தெரியுமா? அல்லது காயத்திரியை தெரியுமா? என ரசிகர்களிடம் கேட்டால் நிச்சயமாக காயத்திரி என்ற பெயரை மட்டுமே தேர்தெடுப்பார்கள். அந்தளவுக்கு தெய்வமகள் சீரியலில் அவர் ஏற்று நடித்த காயத்திரி கதாப்பாத்திரம் மக்களிடையே பிரபலமாக பதிந்துவிட்டது. சீரியல் பார்க்கும் குடும்ப பெண்களாக இருந்தால் கண்டிப்பாக காயத்திரியை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படி தெரிந்திருந்தால், அவரை வசைபாடாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

ஏனென்றால், தன்னுடைய வில்லத்தனங்களால் அதிரவைத்தார் ரேகா குமார். நடிப்புக்கு ஏற்ற பாராட்டுகள் அவருக்கு கிடைத்தது. சீரியலில் நடிக்கும் கதாப்பாத்திரத்துக்கும், தன்னுடைய நிஜ வாழ்க்கைக்கும் துளியும் சம்பந்தமில்லாமல் இருக்கிறார். இது குறித்து அவர் பேசும்போது, சீரியலில் வில்லியாக நடிப்பதால், நிஜ வாழ்க்கையிலும் அப்படியே இருப்பேன் என பலரும் நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. நான் மிகவும் சாந்தமான அமைதியான பெண் என ரேகா குமார் தெரிவித்துள்ளார். தெய்வமகள் மட்டுமல்லாது ‘நந்தினி’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து சின்னத்திரையில் குறிப்பிடத்தகுந்த வில்லியாக வலம் வரும் அவர், சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேலை முதல் மார்டன் டிரஸ் வரை என கலர் கலராக புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாகவும், அழகாகவும் இருக்கும் அவரை பார்த்து, தெய்வமகள் காயத்திரியா இது? என வாய் மேல் விரல் வைக்கின்றனர். டிரஸூக்கு ஒரு சாம்பிள் என்கிற ரீதியில் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் அடுக்கி வரும் ரேகா குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
தன்னுடைய புகைப்பட ஆர்வம் மற்றும் நடிப்பு ஆர்வம் குறித்து பேசிய ரேகா, திருமணமான பின் நடிக்கக்கூடாது என மாமியார் வீட்டில் தெரிவித்ததாக கூறியுள்ளார். ஆனால், திருமணத்துக்குப் பிறகு தனக்கு இருக்கும் நடிப்பு ஆர்வத்துக்கு அவர்கள் தடை விதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், தன்னுடைய நடிப்புக்கு முதல் ரசிகர் என் கணவர் என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Also read... "இறுதியாக கடின உழைப்பு பலனளிக்கிறது" உடல் எடையை குறைத்த நடிகை சமீரா ரெட்டி உற்சாகம்!

"பெங்களூரில் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் படித்தேன். அப்போதே எனக்கு நடிப்பு மீது ஆர்வம் இருந்து இயக்குநர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது கிடைக்கவில்லை.
சிறிது நாளுக்கு பின்னர் அதே இயக்குநரிடம் இருந்து அழைப்பு வந்து வாய்ப்பு வழங்கினார். மலையாளத்தில் ஒளிபரப்பான சேச்சி அம்மா சீரியலில் வில்லியாக நடித்தேன். முதல் சீரியலே நெகடிவ் கதாப்பாத்திரம் என்றாலும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என எண்ணி நடித்தேன். அதன்பிறகு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தது. புகைப்படம் எடுத்துக்கொள்வது எப்போதும் எனக்கு பிடிக்கும். அதன் மீது தனிப்பட்ட ஆர்வமும் உண்டு. அதனாலேயே தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டு வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். சீரியலில் வில்லியாக இருந்தாலும், நிஜத்தில் ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பவராக இருக்கிறார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: