இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்றது தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்

ரன்வீர் சிங்கை மணந்தார் தீபிகா படுகோன்

இந்த திருமணத்தில் 40 விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோர் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இன்று மணவாழ்வில் இணைந்தனர்.

இத்தாலியில் பனிபடர்ந்த ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள லேக் கோமோ பகுதி உலகின் பிரசித்தபெற்ற சுற்றுலா தளமாகும். இங்குள்ள சொகுசு விடுதி ஒன்றில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கின் திருமணம் கொன்கனி முறைப்படி நடைபெற்றது. நாளை சிந்தி பஞ்சாபி முறைப்படியான திருமண சடங்குகள் நடைபெறவுள்ளன.இந்த திருமண நிகழ்வில் பங்கேற்க பாலிவுட் பிரபலங்கள் ஷாருக் கான், ஃபரா கான், அர்ஜூன் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த திருமணத்தில் 40 விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகைப்படம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையடுத்து திருமண அரங்கில் மொபைல் போன்கள் அனுமதிக்கப்படவில்லையாம். முன்னதாக விருந்தினர்கள் பரிசுப் பொருட்களை தங்களுக்கு தரவேண்டாமென்றும், அதற்கு மாறாக அவற்றை தொண்டு நிறுவனத்திற்கு தந்துதவ வேண்டுமென்றும் மணமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்த திருமண நிகழ்வில் வெகு சிலரே பங்கேற்ற நிலையில், விரைவில் பெங்களூருவிலும், மும்பையிலும் நடக்கவுள்ள திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க முக்கியப் புள்ளிகள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோலிவுட்டில் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்க கிளிக் செய்க

News18 Tamil Appசெய்திகளை நியூஸ்18 தமிழ் ஆப் வழியாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
Also watch

Published by:DS Gopinath
First published: