தீபிகா படுகோனே குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

news18
Updated: June 13, 2018, 7:18 PM IST
தீபிகா படுகோனே குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
தீபிகா படுகோனே வீடு உள்ள குடியிருப்பில் தீ விபத்து
news18
Updated: June 13, 2018, 7:18 PM IST
மும்பையில் பிரபல நடிகை தீபிகா படுகோனே உட்பட பாலிவுட் பிரபலங்கள் வசித்து வரும் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள அப்பாசாஹேப் மராதே மார்க் என்ற இடத்தில் உள்ள பிரபாதேவி குடியிருப்பு பகுதியில், 33 மாடிகளை கொண்ட ப்யூமாண்டே டவர்ஸ் உள்ளது. பாலிவுட்டைச் சேர்ந்த இயக்குனர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் இந்தக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பின் 26-வது மாடியில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வசித்து வருகிறார். மேலும் தீபிகா படுகோனின் அலுவலகமும் இதே அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளது.

இந்நிலையில் குடியிருப்பின் 33-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வாகனங்கள், சிறப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து குடியிருப்பில் இருந்து மக்கள் வெளியேற்றபட்டனர். தீபிகா படுகோனேவின் வீடு மற்றும் அலுவலகம் பாதுகாப்பாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 90-க்கும் மேற்பட்டோர் குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதங்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கு உள்ளாகியிருக்கும் இந்த குடியிருப்பில் கடந்த 2010-ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, 4 படுக்கையறை வசதி கொண்ட குடியிருப்பை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...