இத்தாலியில் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்

ரன்வீர் சிங், தீபிகா படுகோன்

தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் நாளை மணவாழ்வில் இணைகின்றனர். நாளை தென்னிந்திய முறைப்படியும், 15-ம் தேதி சிந்தி-பஞ்சாபி முறைப்படியும் திருமணம் நடைபெறுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கின் திருமணம் இத்தாலியில் நாளை (நவம்பர் 14) நடைபெறுகிறது. மணவிழாவுக்கு வரும் விருந்தினர்கள், பரிசுப்பொருள்களை தவிர்க்கும்படியும், அதை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும்படியும் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் நாளை மணவாழ்வில் இணைகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திருமணம், இத்தாலியில் இரு தினங்கள் நடைபெறுகிறது. நாளை தென்னிந்திய முறைப்படியும், 15-ம் தேதி சிந்தி-பஞ்சாபி முறைப்படியும் திருமணம் நடைபெறுகிறது.

இத்தாலியில் பனிபடர் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள, உலகின் மிகப்பிரசித்தபெற்ற  லேக் கோமோ பகுதியில் நடக்கும் திருமண நிகழ்வில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக் கான், ஃபரா கான், அர்ஜுன் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

திருமணம் நடைபெறும் வில்லா டெல் பால்பியானோ சொகுசு விடுதி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 12 மலர் அலங்கார நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மணமகன், மணமகள் இருவரும் திருமண நிகழ்விடத்தில் இருந்து 10 நிமிட பயண தொலைவில் உள்ள விடுதியில்  தங்கியுள்ளனர்.

விருந்தினர்கள் தங்களுக்கு பொருட்களைத் தரவேண்டாமென்றும், அவற்றை மனஅழுத்தத்தில் இருந்து மீள உதவும், LIVE LOVE LAUGH என்னும் தொண்டு நிறுவனத்திற்கு தந்துதவ வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமண நிகழ்வில் வெகு சில பிரபலங்களே பங்குபெறவுள்ள நிலையில் பெங்களூருவிலும், மும்பையிலும் நடக்கவுள்ள திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க இந்தியாவின் முக்கியப் புள்ளிகள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Also watch

Published by:DS Gopinath
First published: