Home /News /entertainment /

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த தீபிகா படுகோன்... பாலிவுட் அதிரும் மெகா பட்ஜெட்...!

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த தீபிகா படுகோன்... பாலிவுட் அதிரும் மெகா பட்ஜெட்...!

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

இத்திரைப்படம் பல பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
மெகா பட்ஜெட்டில் தயாரிப்பாளராகத் தனது அடுத்தக் கட்ட திரைப்பயணத்தை முன்னெடுத்துச் செல்வதாக நடிகை தீபிகா படுகோன் அறிவித்துள்ளார்.

பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஆக அறியப்படும் நடிகை தீபிகா படுகோன், மஹாபாரதம் என்னும் திரைப்படத்தை அடுத்தத்தாக தயாரித்து நடிக்கவும் உள்ளார். இத்திரைப்படத்தில் திரெளபதி கதாபாத்திரத்தை தீபிகா ஏற்றுள்ளார். வரலாற்றுப் படங்கள் என்றாலே தீபிகா படுகோன் அதில் முக்கியக் கதாபாத்திரமாக இருப்பார்.

மெகா பட்ஜெட்டில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் தனது வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்கிறார் தீபிகா. இம்முறை தான் தயாரித்து நடிக்க உள்ள மஹாபாரதம் ஒரு ஆணின் பார்வையில் ஆண்களைக் குறித்ததாக இல்லாமல் மாற்று முயற்சியில் புதியதொரு கதைக்களத்தில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்திரைப்படம் பல பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: பிகில் சிறப்புக்காட்சி தாமதம்... விஜய் ரசிகர்கள் வெறியாட்டம்...!
Published by:Rahini M
First published:

Tags: Actress Deepika padukone

அடுத்த செய்தி