Home /News /entertainment /

மும்பைக்கு அருகே புதிய பங்களா வாங்கும் தீபிகா - ரன்வீர் சிங்.. விலை எவ்வளவு தெரியுமா?

மும்பைக்கு அருகே புதிய பங்களா வாங்கும் தீபிகா - ரன்வீர் சிங்.. விலை எவ்வளவு தெரியுமா?

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

புதிய பங்களா வாங்க ரூபாய் 1.32 கோடி முத்திரை கட்டணமாக செலுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார். ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை தீபிகா படுகோன் தற்போது சுமார் 50க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். புதிய படங்களுக்கு சம்பளமாக 10 முதல் 12 கோடி வரை வாங்குகிறார். இவர் பாலிவுட்டின் சிறந்த ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த ரன்வீர் சிங் அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதனிடையே மும்பையில் பிரபாதேவி ஏரியாவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 4 பெட்ரூமுடன் கூடிய ஃபிளாடில் இருவரும் வசித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் பெங்களூருவிலும் விலை உயர்ந்த அப்பார்ட்மென்ட் ஒன்றையும் இந்த ஜோடி வாங்கியது.

இவர்களது சொத்து மதிப்பு சுமார் 600 கோடிக்கும் மேல் இருக்கலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதியினர் மும்பைக்கு அருகே ரூ. 22 கோடிக்கு புதிய பங்களாவை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அளித்த தகவலின் படி, தங்கள் நிறுவனங்களின் வருமானத்தில் இருந்து இந்த பங்களாவை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்காக இருவரும் ரூ. 1.32 கோடி முத்திரை கட்டணமாக செலுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில், தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் பதிவுத் துறை அலுவலகத்துக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. 5 படுக்கையறைகள் கொண்ட இந்த பங்களா சுமார் 9,000 சதுர மீட்டர் அளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி நிறுவனமான Zapkey.com அளித்த தகவல்படி, தீபிகா பாட்னராக உள்ள கேஏ எண்டர்பிரைசஸ் எல்எல்பி மற்றும் ரன்வீரின் ஆர்எஸ் வேர்ல்ட்வைட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வருமானத்தில் இருந்து தான் இந்த புதிய பங்களாவை வாங்கி இருப்பதாகவும், ராஜேஷ் எஸ் ஜக்கி என்பவரிடம் இருந்து இந்த சொத்து வாங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய Zapkey.com இணை நிறுவனர் சந்தீப் ரெட்டி, தீபிகா - ரன்வீர் தம்பதியினர் மும்பைக்கு புறநகர் பகுதியில் இருப்பதற்காக இந்த பங்களாவை வாங்கி இருக்கலாம் என கூறினார். சமீப காலங்களில் மும்பைக்கு அருகாமையில் பல்வேறு பிரபலங்களும் இரண்டாவது வீடு ஒன்றை வாங்கி வருகின்றனர். நடிகர் ஷாருக்கான், அனுஷ்கா ஷர்மா, அவரது கணவர் விராட் கோலி மற்றும் ராகுல் கண்ணா போன்ற பல பிரபலங்கள் அலிபாக்கில் வீடு வாங்கி வரும் நிலையில், அந்த வரிசையில் தீபிகா - ரன்வீர் தம்பதியினரும் இணைந்துள்ளனர். ஹிரானந்தனி போன்ற பல சிறந்த பில்டர்கள் அலிபக்கில் பிளாட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்வது அதிகரித்துள்ளதால் வீடு விற்பனை துறை மீண்டும் வளர்ச்சி பெற்று வருவதை காண முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Ramprasath H
First published:

Tags: Actor Ranveer singh, Deepika Padukone

அடுத்த செய்தி