• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திருமணத் தேதியை வெளியிட்ட தீபிகா படுகோனே!

திருமணத் தேதியை வெளியிட்ட தீபிகா படுகோனே!

தீபிகா-ரன்வீர் சிங்

தீபிகா-ரன்வீர் சிங்

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது திருமணத் தேதியை அறிவித்துள்ளார்.

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவரும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்து ஹிட் அடித்த பத்மாவத் திரைப்படத்தில் இருவருக்கமான நெருக்கம் அதிகமாகிவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே தனது திருமணத் தேதியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நவம்பர் மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் தனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் திருமணம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.



    அதே தகவலை தனது ட்விட்டர் பக்கத்திலும் ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார். முன்னதாக ரன்வீர் சின் சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவராக இருக்கும் காரணத்தால் அந்நாட்டில் திருமணம் செய்துகொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அதில் தீபிகாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.



    மேலும் இவர்களது திருமணம் தென்னிந்திய முறைப்படி நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. வெகு விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: