கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆங்கராக இருந்து வருகிறார் ரசிகர்களால் செல்லமாக டிடி என்றழைக்கப்பட்டு வரும் திவ்யதர்ஷினி. சிறிய வயதிலேயே சன் டிவி-யில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.
தொடர்ந்து நடிகை ராதிகா, நடிகை சரிதா நடித்த செல்வி என்ற சன் டிவி சீரியலில் ராதிகாவின் தங்கையாக நடித்தார். பின்னர் விஜய் டிவி-யில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற பல நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரசியமாக தொகுத்து வழங்கினார்.
விஜய் டிவி-யில் இருக்கும் ஆங்கர்களில் சின்னத்திரை ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் டிடி. சென்னையில் பிறந்த இவர் கிங்ஸ்ஃபோர்ட் கான்வென்ட் மற்றும் சி.எஸ்.ஐ ஜெஸ்ஸி மோசஸ் ஹயர் செகண்டரி ஸ்கூலில் பள்ளி படிப்பை நிறைவு செய்தார்.
பின்னர் கல்லாரி வாழ்வில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து ட்ராவல் அண்ட் டூரிஸம் மேனேஜ்மென்டில் எம்.பில் பட்டம் பெற்றார். சின்னத்திரை மட்டுமின்றி இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தனது நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
காஃபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் ஏராளமான பிரபலங்களை மிகவும் சுவாரசியமாக பேட்டி எடுத்து அவர்களையும், ரசிகர்களையும் ஒருசேர கவர்ந்தார். மேலும் இவர் கடந்த 2013-ல் சிறந்த தொகுப்பாளினி விருதை பெற்றார். இனிமையான தொழில் வாழ்க்கை பெற்ற
டிடி-க்கு திருமண வாழ்வு சரியாக அமையவில்லை. 2014-ல் தனது நீண்ட நாள் தோழரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை கைகால் திருமணம் செய்து கொண்டார். எனினும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த ஜோடி 2017-ல் விவாகரத்து பெற்றது.
ALSO READ | சித்தி 2 சீரியலில் என்டிரி கொடுத்த புதிய நடிகை - இவர் யார் தெரியுமா?
முன்பு போல நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல் ஒரு சில முக்கிய அல்லது பெரிய நிகழ்ச்சிகளை மட்டுமே தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்
டிடி. அந்த வகையில் சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள நெற்றிக்கண் திரைப்படம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
டிடி.
இதனிடையே சமீப நாட்களாக மாலத்தீவிற்கு டூர் சென்ற பல நடிகைகள் அங்கு தாங்கள் எடுத்து கொண்ட வீடியோ மற்றும் போட்டோக்களை சுடசுட தங்களது சோஷியால் மீடியாக்களில் ஷேர் செய்து ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளினர். இதில் நடிகை ஹன்சிகா, ஆண்ட்ரியா, மாளவிகா உள்ளிட்டோரும் அடக்கம்.
சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும்
டிடி, தான் முன்னர் மாலத்தீவிற்கு சென்று என்ஜாய் செய்த ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்து, "எனது தொலைபேசி நூலகத்திலிருந்து ஒரு மகிழ்ச்சியான ஃபோட்டோ.... கடலின் வண்ணங்கள் sea blue, sea green" என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.