• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Rajinikanth: ஜப்பானில் வெளியானது ரஜினியின் தர்பார் - ரசிகர்கள் கொண்டாட்டம்

Rajinikanth: ஜப்பானில் வெளியானது ரஜினியின் தர்பார் - ரசிகர்கள் கொண்டாட்டம்

தர்பார்

தர்பார்

ஜப்பானில் ரஜினிக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இன்று அவரது தர்பார் திரைப்படம் அங்கு வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

  • Share this:
    முத்து படத்தில் தொடங்கியது ரஜினியின் ஜப்பான் அலை. அந்தப் படத்தில் இடம்பெற்ற, 'தில்லானா தில்லானா நீ தித்திக்கும் தேனா' பாடலில், ரஜினியின் நடனத்தில் மயங்கிப் போன ஜப்பானியர்கள் ரஜினிக்கு டான்ஸ் மகாராஜா என்ற பட்டத்தை அளித்தனர். ரஜினியின் படங்கள் ஜப்பானில் தொடர்ந்து வெளியாயின. ரஜினியின் ரசிகர்களான ஜப்பானியர்கள் தமிழகம் வந்து ரஜினியை சந்தித்த நிகழ்வும் நடந்தது.

    ரஜினியின் தர்பார் படம் வெளியான போது, ஒரு ஜப்பானிய ரசிகர் படத்தைப் பார்ப்பதற்காகவே ஜப்பானிலிருந்து சென்னை வந்தார். சரளமாக தமிழில் பேசி ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்தார்



    இன்று தர்பார் திரைப்படம் ஜப்பானில் வெளியாகியுள்ளது. ஜப்பானில் உள்ள தமிழர்களுடன், ரஜினியின் ஜப்பானிய ரசிகர்களும் தர்பார் வெளியானதை கொண்டாடி வருகின்றனர்.

    Photos : சிவப்பு நிற லெஹங்காவில் தேவதை போல் இருக்கும் மாளவிகா மோகனன் -போட்டோஸ்

    லிஜோஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த ஜல்லிக்கட்டு திரைப்படம் ஜப்பானில் நாளை வெளியாகிறது. இந்தப் படம் சர்வதேச அரங்கில் பெற்ற அங்கீகாரம் காரணமாக அங்கு திரையிடப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: