தமிழக அரசு மீது பல விமர்சனங்கள் வைத்திருந்தாலும் இசை வெளியீட்டு விழாவுக்கு இடம் கொடுத்ததற்கு நன்றி என்று தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘
லண்டனில் ஒரு பூங்காவிற்கு என் பெயர் வைக்க வேண்டும் என சுபாஷ்கரன் சொன்னார். நான் வேண்டாம் என்றேன்.
ரமணா பார்த்தபோதே முருகதாஸை எனக்குப் பிடித்துவிட்டது. கஜினி முடித்ததும் அவரும் நானும் படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் தள்ளிப்போய்விட்டது. நான் 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம் ஸ்டைலாக, த்ரில்லாக இருக்கும்.
வயசாகிவிட்டது இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து கபாலி, காலா படங்களில் நடிக்கத் தொடங்கினேன். தர்பார் படத்தின் ஆதித்யா அருணாசலம் கேரக்டர் ரொம்பவே பவர்ஃபுல். நயன்தாரா, சந்திரமுகியை காட்டிலும் கிளாமராகவும் எனர்ஜியாகவும் இருக்கிறார்.
இசையமைப்பாளர்களில் இளையராஜாவிற்கு நிகரான இசை ஞானம் படைத்தவர்கள் யாரும் கிடையாது. இளையராஜா எப்படி ஒரு படத்தின் காட்சியைச் சோர்வு இல்லாமல் கொண்டு செல்வாரோ? அதேபோல பக்குவம் அனிருத்துக்கு வந்துவிட்டது. அனிருத் நம்ம வீட்டு குழந்தை. அவர் வளர்ச்சியைப் பார்த்து பெருமையாக உள்ளது.
டிசம்பர் 12 முக்கியமான பிறந்தநாள். வழக்கம்போல் அன்றைய தினம் நான் ஊரில் இருக்க மாட்டேன். தமிழக அரசு மீது பல விமர்சனங்களை வைத்திருந்தாலும் இந்த அரங்கை இசை வெளியீட்டு விழாவிற்கு கொடுத்ததற்கு நன்றி. நான், 69-ல் இருந்து 70 அடியெடுத்து வைக்கிறேன். ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்.
அதேபோல் நீங்களும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது. நல்ல நடிகனாக இருந்தால் மட்டுமே வைக்க வேண்டும் என பாலச்சந்தர் வைத்திருந்த, ரஜினி எனும் பெயரை எனக்கு வைத்தார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை’ என்று தெரிவித்தார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.