நெல்லையில் நடிகர் தனுசுக்கு அவரது ரசிகர்கள் 7 அடி உயரத்தில் சிலை அமைத்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் படம் திரையரங்குகளில் ஓடுகிறது. படத்தை பிரபலப்படுத்தும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக சுமார் 60 ஆயிரம் ரூபாய் செலவில் 7 அடி உயரத்தில் தனுஷுக்கு சிலை வைத்துள்ளனர்.
வேட்டி சட்டையில் கண்ணாடி அணிந்தபடி தனுஷ் நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.