Home /News /entertainment /

கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த நடன மாஸ்டர் சிவசங்கர் காலமானார்!

கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த நடன மாஸ்டர் சிவசங்கர் காலமானார்!

கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த நடன மாஸ்டர் சிவசங்கர் காலமானார்.

கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த நடன மாஸ்டர் சிவசங்கர் காலமானார்.

கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த நடன மாஸ்டர் சிவசங்கர் காலமானார்.

    நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் அவரது மனைவி மூத்த மகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் AlG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து இருந்து வந்தார்.

    அவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தனது அப்பாவுக்கு உதவும்படி சிவசங்கர் மாஸ்டரின் மகன் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவி முன்வந்தனர்.

    இந்நிலையில், கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த நடன மாஸ்டர் சிவசங்கர் மாரடைப்பால் காலமானார்.

    திருடா திருடி படத்தில் வரும் மன்மதராசா பாடல் மூலமாக பெரிது பேசபட்டவர் சிவங்கர் மாஸ்டர். அஜித் வரலாறு படத்தில் பரத நாட்டியம் ஆடும் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய உதவியாகவும் அஜித்திற்கு தனிப்பட்ட நடனம் பயிற்சியும் கொடுத்தவர் இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.

    800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர், ‘மகதீரா’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    அடுத்த செய்தி