ஸ்ரீதர் மாஸ்டருடன் மகள் அக்ஷரா ஆடிய நடனம்... வைரலாகும் வீடியோ!

மகள் அக்ஷரா உடன் ஸ்ரீதர்

சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ஒரு படத்தை இயக்கியும் உள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்ரீதர் மாஸ்டர் தென்னிந்திய திரையுலகில் நடன இயக்குனராக இருக்கிறார். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்பட எண்ணற்ற மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். வேகமான மெட்டுக்களை கொண்ட பாடல்களுக்கு சுறுசுறுப்பான வேகமான டான்ஸ் ஸ்டெப்புகளை அமைப்பதில் நடனக் கலைஞர் ஸ்ரீதர் பெயர் போனவர். இவர் 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்த ஆல்-டைம் ப்ளாக்பஸ்டர் பாடலான "நக்கா மூக்கா" பாடலுக்கு பிரமதனாக கோரியோ செய்திருப்பார்.

இவர் பல நடன ரியாலிட்டி ஷோக்களுக்கு நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ஒரு படத்தை இயக்கியும் உள்ளார். அதேபோல ஸ்ரீதரின் மகள் அக்ஷராவும் தனது தந்தையைப் போலவே பயிற்சி பெற்ற நடனக் கலைஞர் ஆவார். அண்மையில் அவர்கள் இருவரும் தமிழ் பாடல்களின் மெட்லிக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக தந்தை-மகள் இரட்டையரின் நடனமும் நடிப்பும் ரசிகர்களின் இதயங்களை வென்று வருகின்றன.

இந்த வீடியோவில் பல பாடல்களுக்கு இருவரும் குழுவினருடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளனர். ‘எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் தனது மகளை அசத்தலாக நடனமாட வைத்திருப்பதை அடுத்து பிற அனைத்து வீடியோக்களும் இணையத்தை கலக்கி வருகிறது. மேலும், ஸ்ரீதர் மாஸ்டருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று நெட்டிசன்கள் பலர் ஆச்சர்யமாக கேட்டு வருகின்றனர். மாஸ்டருக்கு அடுத்ததாக அவரது மகளும் நடன இயக்குனராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இவர் முதன்முதலில் பொய் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான தில்லானா தில்லானா என்ற ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். அப்போது அவரது வெற்றி மிக பெரிய விஷயமாக பேசப்பட்டு அனைவரையும் இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. அதன்பிறகு, தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக கால்பதித்த இவர், ஒரு வெற்றிகரமான இயக்குனராக வலம் வருகிறார்.

Also read... இரண்டு மொழிகளில் வெளியாகும் சோனியா அகர்வாலின் ஹாரர் படம்...!

ஶ்ரீதர் மாஸ்டரை பிடிக்காத நபர்களே சினிமாவில் கிடையாது என்று சொல்லலாம். ஏனெனில் பிரபு தேவா, லாரன்ஸ் போல இவரும் பல படங்களில் சிறந்த நடனங்களை கொடுத்து வருகிறார். இவரின் ஏ.ஆர்.எஸ் டான்ஸ் அகாடமியில் நூற்றுக்கணக்கான பேர் நடனம் கற்று வருகிறார்கள். அவர்களை வைத்து வருடா வருடம் தனது நடனப்பள்ளி மற்றும் நடனகுளு மூலம் ஒருநிகழ்ச்சியை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், அடுத்த நடன இயக்குனராக தனது மகளையும் திரையுலகில் களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: