ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது : முதலமைச்சர் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி - ரஜினிகாந்த்

இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டிருப்பதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசி வழியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • Share this:

  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும். இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது” இவ்வாறு அவர் கூறினார்.

  இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது, ஏற்கெனவே நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Must Read :  ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

  இந்நிலையில் ரஜினிக்கு அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  Published by:Suresh V
  First published: