அஜித், தனுஷ், ஜோதிகாவிற்கு 2020-ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு

அஜித்,ஜோதிகா,தனுஷ்

2020 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரைப்படத்துறையிருக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  2020 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய  திரைப்படத்துறையிருக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் நடிகர்,நடிகைகளின் திறமையை கவுரவபடுத்துவதற்கு விருதுகள் வழங்குவது வழக்கம்.விருதுகள் என்றால் தேசிய விருது முதல் ஃபிலிம் பேர் விருது வரை அனைத்துமே அவர்களின் திறமைகளை அங்கீகரிக்கப்படும் விருதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டிற்கான தாதாசாக்கேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே பெயரால் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சினிமா துறையில் வெளிவந்த படங்களை ஒப்பிட்டு சிறந்த நடிகர்,சிறந்த நடிகை இப்படி பல பிரிவில் தென்னிந்தியா திரைப்படத்துறையிருக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  அசுரன் திரைப்படத்தில் தனது நடிப்பின் மூல மெய்சிலிர்க்க வைத்த தனுஷுற்கு சிறந்த நடிக்கருக்கான விருது.சிறந்த பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் என்ற விருது அஜித்திற்கும், ராட்சசி திரைப்படத்திற்காக சிறந்த நடிகை என்ற  விருது ஜோதிகாவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இயக்குனர்,தயாரிப்பாளர்,நடிகர் என்று பல திறமையை ஒத்த செருப்பு திரைப்படத்தில் வெளிப்படுத்திய பார்த்திபனுக்கு சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டூ லெட் திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும், சிறந்த இசையமைப்பாளர் விருது அனிருத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதே போல் தெலுங்கு,மலையாளம், கன்னட மொழிகளுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  சிறந்த பன்முகத்திறமை வாய்ந்த நடிகர்-அஜித்

  சிறந்த நடிகர் -தனுஷ் (திரைப்படம்-அசுரன்)

  சிறந்த படம் -டூ லெட்

  சிறந்த இயக்குனர்-பார்த்திபன்(திரைப்படம்-ஒத்த செருப்பு )

  சிறந்த நடிகை-ஜோதிகா(திரைப்படம்-ராட்சசி )

  சிறந்த இசையமைப்பாளர்- அனிருத்

  இந்த தென்னிந்திய தாதா சாகேப் சினிமா விருதுகள் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தனுஷ்,அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.மேலும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தனுஷ் என்ற ஹேஸ்டேகை தனுஷ் ரசிகர்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: