இமானுக்கு சன் பிக்சர்ஸின் பிறந்தநாள் பரிசு!

இமானுக்கு சன் பிக்சர்ஸின் பிறந்தநாள் பரிசு!

டி.இமான்

சூர்யா நடிக்கும் 40-வது படமான இதில் ஹீரோயினாக யார் நடிக்கிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • Share this:
    இசையமைப்பாளர் டி.இமான் இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை இன்னும் சிறப்பாக்கும் வகையில் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    சூரரைப்போற்று திரைப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை பாண்டிராஜ் இயக்கும் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சூர்யா நடிக்கும் 40-வது படமான இதில் ஹீரோயினாக யார் நடிக்கிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



    இதற்கிடையே இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவர் ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை தான்.



    இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும், சூர்யாவின் 40-வது படத்திற்கு டி.இமான் இசையமைப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதை ரீட்வீட் செய்திருக்கும் பாண்டிராஜ், ”இமானுடன் தொடர்ந்து 3-வது முறையாக பணிபுரிவது மகிழ்ச்சி. அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: