Home /News /entertainment /

நடிகர் அஜித்தின் கையெழுத்து மோசடி... களமிறங்கிய சைபர் க்ரைம் போலீசார்

நடிகர் அஜித்தின் கையெழுத்து மோசடி... களமிறங்கிய சைபர் க்ரைம் போலீசார்

Youtube Video

திகதி, உத்யோகபூர்வமான ஆகிய வார்த்தைகளால் இக்கடிதத்தை இலங்கை வாழ் தமிழரால் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

    தனது பெயரில் வெளியான போலியான கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை சைபர் க்ரைம் பிரிவில் நடிகர் அஜித்குமார் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் அஜித்குமார் நெருப்பாய் இருக்கும் ரசிகர் படையைக்கொண்ட முதன்மை நடிகர். அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டியில் முதல்வரிசையில் இருக்கும் தல. அஜித்துக்கும், சமூக வலைதளத்திற்கும் ஏழாம்பொருத்தம். ஆண்டுக்கு ஒரு முறையாவது, சமூக வளைதளங்களில் பரவும் பொய் செய்திகளுக்கு அஜித்குமார் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    நடிகர் அஜித்குமார் கையெழுத்துடன் சமூகவளைதங்களில் சுற்றிய போலியான அறிக்கையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த வகையில் உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கம் இது என்பதை தெரிவித்துக்கொள்வதுடன்மூலம் நீங்கள் என்னுடன் இணைந்திருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

    தற்போது பரப்பப்பட்ட போலி கடிதம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி அஜித் கையெழுத்துடன் வெளியான கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, சில மாற்றம் செய்து வெளிட்டுள்ளது தெரியவந்துள்ளது. நடிகர் அஜித்தின் கையெழுத்தும், பெயரையும் அப்படியே வைத்துக்கொண்டு, அக்கடிதத்திலிருந்து உள்ளடக்கத்தை மோசடிக்கும்பல் மாற்றியுள்ளது.

    போலியான அறிக்கை


    போலியான கடிதத்தில் குறிப்பிட்ட திகதி, உத்யோகபூர்வமான ஆகியவார்த்தைகள் இலங்கை தமிழர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என்பதால், இக்கடிதத்தை இலங்கை வாழ் தமிழரால் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இந்த போலியான கடிதத்தைப்பார்த்த நடிகர் அஜித், உடனடியாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.

    நடிகர் அஜித்குமார் தரப்பில், அவரது வழக்கறிஞர் குழு தற்போது பொதுஎச்சரிக்கை கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், நடிகர் அஜிதுக்கு அதிகாரப்பூர்வமாக சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை என்றும், வெளியானது போலியான கடிதம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமாரின் கையெழுத்தை மோசடி செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    நடிகர் அஜித்குமாரின் கையெழுத்தையும், அவரது லெட்டர் பேடையும் தவறாக பயன்படுத்தி, மோசடி செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை காவல்துறை சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அஜித்தரப்பு கொடுத்துள்ள புகாரின் மீது சென்னை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக, இக்கடிதத்தை வெளியிட்ட முகநூல், டிவிட்டர் கணக்குகள் யாருடைய பெயரில் இருக்கிறது? எங்கிருந்து வெளியிடப்பட்டது என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.

    வழக்கமாக, சமூக வளைதங்களில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடிக்கும். இரு தரப்பு ரசிகர்களும், மிக மோசமாக விமர்சித்துக்கொள்வது வழக்கம். ஆனால், இம்முறை போலியான கடிதத்தை தயாரித்து வெளியிட்டது யார் என்பதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்வார்களா என்பது விரைவில் தெரியவரும்.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Actor Ajith, Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி