புதிய படத்தில் 'குக் வித் கோமாளி' பிரபலம் - புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு!

நடிகை தர்ஷா குப்தா

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பவித்ரா கதாநாயகியாக நடிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா, ருத்ரதாண்டவம் படத்திற்காக டப்பிங் பேசும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட அஷ்வின், கனி, பவித்ரா, தர்ஷா ஆகியோர் திரைத்துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த புகழ் வெளிச்சம் அவர்களை திரைத்துறைக்கு அழைத்துச் சென்றது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பவித்ரா கதாநாயகியாக நடிக்கிறார். இதேபோல், அஷ்வினும் புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

கோமாளிகளாக வந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கிய புகழ், பாலா, ஷிவாங்கி ஆகியோருக்கும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'டான்' திரைப்படத்தில் ஷிவாங்கி நடித்து வருகிறார். புகழ் மற்றும் பாலாவும் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர்களுடன் நடித்து வருகின்றனர். இதேபோல், குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தாவும் 'ருத்ர தாண்டவம்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தன்னுடைய போர்ஷனை முழுவதுமாக நிறைவு செய்துள்ள தர்ஷா, தற்போது தன்னுடைய கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசி வருகிறார். இந்தப் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் மோகன்ஜி ஏற்கனவே திரௌபதி படத்தை இயக்கியுள்ளார். ரிஷி ரிச்சர்டு ஹீரோவாக நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒரு சேர பெற்றாலும் வசூலில் நல்ல சாதனை படைத்தது. அரசியல் களத்திலும் திரௌபதி படம் பெரும் விவாதத்தை கிளப்பியது. முதல் படமே பெரும் விவாதப் பொருளாகவும், வெற்றிப்படமாகவும் அமைந்த நிலையில், மோகன்ஜி இயக்கத்தில் உருவாகும் ரூத்ர தாண்டவம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

Also read... த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகவுள்ள சாதி ஆணவப் படுகொலை திரைப்படம்!

இந்த எதிர்பார்ப்புக்கு வலுசேர்க்கும் விதமாக வில்லன் கதாபாத்திரத்தில் முன்னணி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார். கதாநாயகனாக திரௌபதி படத்தில் நடித்த ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரங்களில் தம்பி ராமையா, விக்கி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. கவுதம் வாசுதேவ் மேனன், வாதாபிராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக இயக்குநர் மோகன்ஜி தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஃபரூக், இசையமைப்பாளராக ஜூபின் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 'திரெளபதி' படத்தைத் தயாரித்த ஜி.எம். பிலிம் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. மேலும், படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார். காதலர் தினத்தன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால், காதலை மையப்படுத்திய திரைக்கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: