பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எழிலின் கியூட் புகைப்படங்கள் வைரல்!

நடிகர் எழில்

மலையாள நடிகையான சுசித்ரா இந்த சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சி துறைக்கு அறிமுகமாகிறார்

  • Share this:
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியல் ஜூலை 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரை 'டேவிட்' என்பவர் இயக்கி வரும் நிலையில் , சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  மலையாள நடிகையான சுசித்ரா இந்த சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சி துறைக்கு அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக மகாராணி, கல்யாணப்பரிசு 2 போன்ற தொடர்களில் நடித்த 'சதிஷ்' நடிக்கிறார். இவருடன் வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் போன்ற பலர் நடிக்கிறார்கள்.

இல்லத்தரசியாக இருக்கும் பாக்கியலட்சுமி அம்மாவாக, மனைவியாக, மருமகளாக போன்ற பல பொறுப்புகளில் வகிக்கின்றார். ஆனால் அவர் படும் பாடுகள் என்ன சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் அவரை எப்படி அவமதிக்கிறார்கள். பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் இந்த சீரியலின் கதை.

இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று வருகிறது. படிக்காத ஒரு குடும்ப தலைவி எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறாள் என்பதை விவரிப்பதால் குடும்ப தலைவிகள் மனதில் எளிதில் இடம் பிடித்துள்ளது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் கணவர் மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கும் நிலையில் அதனை அவரது மகன் எழில் கண்டுபிடித்து விடுகிறார்.  அப்பா செய்யும் ஒரு தவறு இப்போது குடும்பத்தில் ஒருவரிடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய சீரியல் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் கதாநாயகன் எழில் பிரபலமாகி வருகிறார். இவரது உண்மையான பெயர் விஷால். ஆரம்பத்தில் பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியவர் இவர் தற்போது இந்த சீரியல் மூலம் மக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளார். தங்களுக்கு இப்படி ஒரு மகன் வேண்டும் என ஏங்கும் வகையில் எழில் நடிப்பு சிறப்பாக உள்ளது. அவருக்கு ஜோடியாக ரித்திகா இருக்கிறார்.

நடிகர் எழிலின் குழந்தை பருவ படம்


சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் எழில் சமீபத்தில் தளபதி விஜயின் பாப்புலர் டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்த நிலையில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

Read More:  ஆக்ஸிமீட்டரை எவ்வாறு பயன்படுத்துவது? நடிகை பூஜா ஹெக்டே விளக்கம்!

இதனை தொடர்ந்து அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பாக்கியலட்சுமி சீரியல் தயாரிப்பாளருடன் புகைப்படம் எடுத்து பதிவு செய்துள்ளார். மேலும் அவரது குழந்தை பருவ புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் கியூட்டாக இருப்பதால் அந்த புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர்.
Published by:Arun
First published: