மேதகு படம் மக்களிடம் சென்று சேரக்கூடாது என என் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது-இயக்குனர் கிட்டு

மேதகு படம்

மேதகு படத்தின் மேல் வைக்கப்படும் விமர்சனம் குறித்து இயக்குனர் கிட்டு விளக்கமளித்துள்ளார்.

 • Share this:
  விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மறைந்த பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான மேதகு மக்களிடம் சென்று சேரக் கூடாது என்றே தன் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவதாக அதன் இயக்குனர் கிட்டு தெரிவித்துள்ளார்.

  பிரபாகரனின் இளமைக்கால வாழ்க்கையைப் பேசும் திரைப்படமாக மேதகு கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளியான நாள் முதல் படத்தின் இயக்குனர் கிட்டு மீது பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. குறிப்பாக அவர் முந்தைய நாட்களில் சமூக வலைதளங்களில் பல தலைவர்களை தரம் தாழ்ந்து பேசியுள்ளதாகவும் தனிமனித தாக்குதல் ஈடுபட்டுள்ளதாகவும் அவருடைய பதிவுகளை சுட்டிக்காட்டி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

  தற்போது கிட்டு அதற்கு விளக்கம் அளித்துள்ளார். மேதகு திரைப்படம் மக்களிடம் சென்று சேர கூடாது என்பதற்காகவே இது மாதிரியான விமர்சனங்கள் வைக்கப்படுவதாகவும், இத்திரைப்படம் வெளியாவதற்கு அனைத்து கட்சியினரும் பாரபட்சமில்லாமல் உழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்படி தான் பேசியது புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தங்களையும் கிட்டு தெரிவித்திருக்கிறார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: