விலையுயர்ந்த காரை பயன்படுத்திய மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா- வைரலாகும் புகைப்படம்

சித்ரா

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா பயன்படுத்திய விலையுயர்ந்த காரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

  • Share this:
கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணச் செய்தி, சின்னத்திரை உலகையே ஸ்தம்பிக்கச் செய்தது. அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார் என்பது பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, ஒரு ரியாலிட்டி ஷோ படபிடிப்பில் இருந்தார். தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்தார். அடுத்த நாள் விடியும் முன்பே, அவர் தற்கொலை செய்து இறந்து போனார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சின்னத்திரையில் தொகுப்பாளாராக அறிமுகமாகி, பல்வேறு கஷ்டங்களை, சவால்களை எதிர்கொண்டு, அனைத்தையும் ஜெயித்து, பிரபலமான நிலையில், சட்டென்று இப்படியொரு முடிவு எடுத்தது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. அதுவும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக அனைவர் மனதிலும் இடம் பெற்றிருந்த நேரத்தில் இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்தது.

பெரிய அளவில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியது. அதற்கு முன்பும், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வேலு நாச்சி சீரியலில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து, மனதைக் கவர்ந்தவர் சித்ரா. இவரின் தமிழுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சித்ராவின் பிரத்யேக ரசிகர் கூட்டத்திற்கு, இன்று வரையிலும் இவரின் இறப்பை தங்கிக் கொள்ள முடியவில்லை

Photos : இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை பிரியாமணி -போட்டோஸ்

அதனால், அவரைப் பற்றிய பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்று வரை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில், சித்ராவின் தீவிரமா ரசிகர் ஒருவர், அவர் பயன்படுத்திய விலையுயர்ந்த காரின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர் இல்லாத வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.

‘வி மிஸ் யூ சோ மச் சித்ரா’ என்ற கேப்ஷனுடன் சித்ராவின் ரசிகர் பகிர்ந்த அந்த புகைப்படம் இங்கே.இந்த விலையுயரந்த காரை சித்ரா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் வாங்கினார். அடிமட்டத்திலிருந்து முன்னேறி, பெரிய நிலையில், நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகை சித்ராவை சின்னத்திரை வட்டாரமும், ரசிகர்களும் பாராட்டி, கொண்டாடி மகிழ்ந்தனர். சீரியல் மட்டுமின்றி, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக கௌரவிக்கப்பட்டார். மேலும், ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு, தன்னுடைய வேடிக்கையான, துடுக்கான, ஜாலியான மற்றொரு முகத்தைக் காண்பித்தார். மிகவும் தைரியமாக பெண்ணாக அறியப்பட்ட சித்ரா நம்மோடு இல்லை என்பது மிகவும் வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது.

முல்லையாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த சித்ரா இறந்த பின், பல வாரங்கள் வரை அந்த பாத்திரத்தில் வேறு யாரையும் ஏற்றுக்கொள்ளக் கூட மனதில்லாமல் இருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: