முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சென்னையில் துணை நடிகையை காதலித்து ஏமாற்றியதாக நடிகர் கைது

சென்னையில் துணை நடிகையை காதலித்து ஏமாற்றியதாக நடிகர் கைது

 தியாகராஜன்

தியாகராஜன்

நடிகையை காதலித்து ஏமாற்றிய மாநகராட்சி ஊழியர் மீது பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த தியாகராஜன் (32). "தரிசு நிலம்" என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் "நாடோடிகள்" படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2011-ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி துணை நடிகையுடன் தியாகராஜன் நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது. மேலும் நடிகையிடம் இருந்து தியாகு பணம் நகை ஆகியவற்றையும் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தியாகராஜனுக்கு சென்னை மாநகராட்சியில் தொழில்நுட்ப பிரிவில் உதவி ஆய்வாளராக பணி கிடைத்தது. இதனால் தியாகராஜன் துணை நடிகையிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். சந்திப்பதையும் நிறுத்தியதால் துணை நடிகை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நடிகை ஒரு வயது மூப்பு என்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் தியாகராஜன் துணை நடிகையை திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக துணை நடிகை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் தியாகராஜன் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு தியாகராஜன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க...

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை நீக்க மத்திய அரசு முடிவு


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published:

Tags: Cinema, Crime | குற்றச் செய்திகள், Criminal case