• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கொரோனா - நடிகை காஜல் அகர்வால் ரூ.6 லட்சம் நிதியுதவியுடன் ‘பீட்டா’ அமைப்புக்கும் உதவி

கொரோனா - நடிகை காஜல் அகர்வால் ரூ.6 லட்சம் நிதியுதவியுடன் ‘பீட்டா’ அமைப்புக்கும் உதவி

ஏறத்தாழ பத்து ஆண்டுகளை நடிப்புத்துறையில் நிறைவு செய்துள்ள காஜல் அகர்வால் 34 வயதை கடந்தவர். பொம்மலாட்டம் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய காஜல், கத்தி, ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் விஜயுடனும், விவேகம் திரைப்படத்தில் நடிகர் அஜித்துடனும் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். விஜய் நடிக்கும் 65வது திரைப்படத்திலும் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.

இதுதவிர விலங்குகள் நல அமைப்பான பீட்டாவுக்கும் அவர் உதவிக்கரம் நீட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    கொரோனா காலத்தில் நடிகை காஜல் அகர்வால் ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    திரைப்படத்துறையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் சினிமா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    15 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு உதவ நடிகர்கள், தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்று அச்சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக் கொண்டார். அதேபோல் மத்திய, மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டன.

    இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும், பிரதமரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சம் என மொத்தமாக ரூ.6 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். இதுதவிர தன்னிடம் உதவி கோரிய விலங்குகள் நல அமைப்பான பீட்டாவுக்கும் அவர் உதவிக்கரம் நீட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: நடிகர் விக்ரமுக்கு பிறந்தநாள் கிஃப்ட் கொடுத்த கோப்ரா பட இயக்குநர்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: