"நாங்க Tom & Jerry": சிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட ரக்‌ஷன்!

வி.ஜே.ரக்‌ஷன்

விஜய் டிவி பிரபலங்களுடன் இணைந்து புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து பதிவிட்டு வந்த ரக்‌ஷன், ரசிகர்களுக்கு திடீரென இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார்.

 • Last Updated :
 • Share this:
  விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் ரக்‌ஷன். கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை 2 சீசன்களாக தொகுத்து வழங்கிய அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக வலம் வந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலா, புகழ், சரத் ஆகியோருடன் இணைந்து காமெடியிலும் கலக்கினார். தமிழ் புத்தாண்டு முதல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததால், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது, விஜய் டிவி பிரபலங்களுடன் இணைந்து புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து பதிவிட்டு வந்த அவர், ரசிகர்களுக்கு திடீரென இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார்.

  தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு, மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் தனது அக்காவுடன், சுட்டிக் குழந்தையாக ரக்‌ஷன் இருக்கிறார். இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது இயல்பாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை மலரும் நினைவுகளாக இன்றும் பாதுகாத்து வருகிறார். தான் மட்டுமே வைத்து பார்த்து வந்த புகைப்படத்தை ரசிகர்களுக்காகவும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துக்கு மேல் ஒரு சூப்பரான கேப்சன் ஒன்றையும் எழுதியுள்ளார். அதாவது, நாங்கள் என்றுமே Tom & Jerry என குறிப்பிட்டு, அக்காவுடன் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by Rakshan (@rakshan_vj)


  இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேல் பின் தொடர்பாளர்கள் ரக்‌ஷனுக்கு இருப்பதால், அவர் பகிர்ந்த போட்டோவை பலரும் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர். தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் ஜோடி நிகழ்ச்சியில் தன்னுடயை சிறந்த நடனதையும் வெளிப்படுத்தினார். துல்கர் சல்மானுடன் இணைந்து அவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. துல்கருக்கு இணையாக மிகச்சிறந்த நடிப்பை ரக்‌ஷன் வெளிப்படுத்தியதாக விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்தனர். இன்னும் சில படங்களில் கமிட்டாகியுள்ள ரக்‌ஷன், விரைவில் அது குறித்த அப்டேட்டை வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

  Also read... Doctor Sharmila : மனிதமும், சமூகநீதியுமே எனது அடையாளம்.! ஜாதி இல்லை.. டாக்டர் ஷர்மிளா நெத்தியடி

  அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ரக்‌ஷன், இப்போது கிடைத்திருக்கும் புகழுக்காக அனைத்து விதமான வேலைகளையும் செய்துவிட்டதாக கூறியுள்ளார். பல்வேறு தடைகள் மற்றும் போராட்டங்களைக் கடந்து இந்த வெற்றியைப் பெற்றிருப்பதாகவும், கிடைத்த வேலைகளை பிடித்து செய்ததால், பிடித்த வேலை தனக்கு கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இப்போது கிடைத்திருக்கும் வெற்றியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள நல்ல உழைப்பைக் கொடுப்பேன் எனக் கூறிய ரக்‌ஷன், மக்கள் கொடுக்கும் ஆதரவு தம்மை வியக்கவைப்பதாக கூறியுள்ளார். பல நிராகரிப்புகளுக்கு பின் இருக்கும் வலி, இப்போது கிடைத்திக்கும் இந்த உயரத்துக்கு காரணம் எனவும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அவரின் ஒவ்வொரு மூவ்யையும் ரசிகர்களும் உன்னிப்பாக கவனித்து பாராட்டி வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: