குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு பரிசளித்த யூடியூப் நிறுவனம் - ரசிகர்கள் வாழ்த்து!

சிவாங்கி

குக் வித் கோமாளி மூலம் புகழ் உச்சியை தொட்ட ஷிவாங்கி சமூக வளைதளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

  • Share this:
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சிவாங்கி,  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெரியளவில் பிரபலமானார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 2ல் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, சக்தி ஆகியோர் இருந்த நிலையில், இவர்களின் நகைச்சுவை மிகவும் பிரபலமானது.

ஊரடங்கு காலத்தில் மக்கள் ரசித்து பார்த்த ஷோவாக குக் வித் கோமாளி புகழ் பெற்றது. குறிப்பாக ஷிவாங்கி, புகழ் நிகழ்ச்சியின் போது செய்த நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதால் இருவரும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி, அஷ்வினுடன் சுற்றிக்கொண்டிருந்ததால் அவரும் புகழ் பெற்றார். இதனால் இவர்களுக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்த நிகழ்ச்சில் கனி, சகிலா, அஸ்வின் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.



இந்த நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்த நிலையில் அனைவரும் புகழ் பெற்று திரைப்பட வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். ஷிவாங்கிக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்திருக்கிறது. தற்போது இவர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். டான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்று வருகிறது.

ஷிவாங்கியின் சில யூடியூப் வீடியோக்கள் இங்கே:




குக் வித் கோமாளி மூலம் புகழ் உச்சியை தொட்ட ஷிவாங்கி சமூக வளைதளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளார். அவர் எந்த வீடியோ போட்டாலும் டாப் லிஸ்டில் இடம் பெற்றுவிடும். அந்த வகையில் தன்னுடைய யூடியூப் சேனலில் அவ்வப்போது போடும் சில வீடியோக்கள் டிரெண்டிங்கிலும் இடம் பெறும். இந்நிலையில் அவர் சொந்தமாக வைத்துள்ள யூடியூப் சேனல் தற்போது 1 மில்லியன் Subscribers கடந்துள்ளது. இதனால் யூடியூப் அவருக்கு கோல்டன் பட்டனை பரிசளித்துள்ளது. இதனை வீடியோவாக எடுத்து ஷேர் செய்துள்ள ஷிவாங்கி, ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Sivaangi (@sivaangi.krish)





மேலும் கடந்த 2017-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய ஷிவாங்கி 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றார். இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களில் 1 மில்லியன் பேர் ஷிவாங்கியை பின் தொடர ஆரம்பித்திருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது 3 மில்லியன் ரசிகர்கள் ஷிவானியை பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது யூடியூப் சேனலை 1.5 மில்லியன் மக்கள் Subscribe செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஷிவாங்கி தனது குறும்புத்தனமான செயல்கள் அடங்கிய வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: