முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘குக் வித் கோமாளி’ தான் என்னோட ஃபேவரட்-நடிகர் ஹரிஷ் கல்யாண்..

‘குக் வித் கோமாளி’ தான் என்னோட ஃபேவரட்-நடிகர் ஹரிஷ் கல்யாண்..

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் என்னுடைய சமீபத்திய stress buster என நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்.

  • Last Updated :

கொரோனா காலத்தில் லாக்டவுன் என்ற நிலை ஏற்பட்ட போது, வீட்டில் உள்ள அனைவரும் தொலைக்காட்சி பக்கம் திரும்பினர். பெரும்பாலானோர் தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையே விரும்புவார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சி, ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை அடித்துக்கொள்ளவே முடியாது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ என்ற வித்தியாசமான நிகழ்ச்சி 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மேலும் தொடகத்திலேயே பார்வையாளர்களுக்கு ஃபேவரட்டான நிகழ்ச்சி என்ற பெயரையும் பெற்றுவிட்டது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு டீமில் இரண்டு பேர் இருக்க வேண்டும். ஒருவர் கோமாளியாக, மற்றொருவர் குக்காக செயல்பட வேண்டும். போட்டியாளர்களுக்கு இடையில் சமையளுக்கான போட்டி நடைப்பெற்று கொண்டிருக்கும் போதே கொடுக்கப்படும் டாஸ்க்கையும் இருவரும் செய்து முடிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மக்களிடையே அபார ஆதரவை பெற்றதால் சீசன் 2 நிகழ்ச்சியானது 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த போட்டியில் சிவாங்கி, பாலா, புகழ், சரத், மணிமேகலை, சரத் போன்றவர்கள் கோமாளியாக இருந்து வாரா வாரம் தங்களின் நகைச்சுவை மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாணும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ரசிகர் என்பது தெரியவந்துள்ளது. ஹரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி பகிர்ந்துள்ளார். அதில் ‘என்னுடைய சமீபத்திய stress buster-ஆக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. அனைத்து போட்டியாளர்களுமே சிறப்பாக விளையாடுகிறீர்கள். ஒரு முறையாவது உங்கள் அனைவரையும் நேரில் பார்த்து எங்களை சிரிக்க வைப்பதற்காக நன்றி கூற வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Actor Harish kalyan, Television Program