சூப்பர் சிங்கர் பிரபலத்துடன் காதலா? ஷிவாங்கி விளக்கம்

சூப்பர் சிங்கர் பிரபலத்துடன் காதலா? ஷிவாங்கி விளக்கம்

ஷிவாங்கி

குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி காதல் குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைகுட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர்.

விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வருகை தந்து தனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்று கூறி ஷிவாங்கியை பாராட்டினார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷிவாங்கியிடம் நெட்டிசன் ஒருவர் சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷாலை காதலிக்கிறீர்களா அவரைப் பற்றி சொல்லுங்கள் எனக் கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் படிக்க: சீமானிடம் பேசி துக்ளக் தர்பார் பிரச்னையை தீர்த்த பார்த்திபன்

அதற்கு பதிலளித்த ஷிவாங்கி, “அவர் என்னுடைய நெருங்கிய தோழர். எதுவாக இருந்தாலும் அவரிடம் பகிர்ந்து கொள்வேன். வெளியே சென்றாலும் அவரது நண்பர்களையும் அழைத்து செல்வேன். இன்ஸ்டாகிராமில் ஒரு வேளை அப்படி இருக்குமோ என்று கேட்கிறார்கள். இல்லவே இல்லை” என்று கூறியுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: