பாலாவை காதலிக்கிறேனா? குக் வித் கோமாளி ரித்திகா ஓபன் டாக்!

குக் வித் கோமாளி ரித்விகா

பாலாவை காதலிக்கிறீர்களா? என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நடிகை ரித்திகா இன்ஸ்டாகிராம் லைவ்வில் ஓபன்னாக பதில் அளித்துள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் பாலா - ரித்திகா ஜோடியாக பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் இவர்கள் இருவரின் ஜோடி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. கோமாளியாக வந்த பாலாவும், போட்டியாளராக வந்த ரித்திகாவுக்கும் ஜோடி பொருத்தமும், வேவ் லென்த்தும் சிறப்பாக செட் ஆனது. சமையலில் கலக்கிய ரித்விகா, பாலாவுடன் சேர்ந்து காமெடியிலும் பட்டையை கிளப்பினார்.

இதனால், பாலா - ரித்திகா ஜோடி இணையத்தில் வைரலானது. இதனால் வழக்கம்போல பாலாவும் - ரித்திகாவும் காதலிக்கின்றன என மீம்ஸூகளும், தகவல்களும் பரவத் தொடங்கியது. காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் அறிமுக சுற்றில் இருவரும் ’வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலுக்கு ரொமான்ஸ் ததும்பும் வகையில் சூப்பராக பர்ஃபாமென்ஸ் செய்தனர். இதனால், செல்லும் இடங்கள், யூ டியூப் சேனல்களில் எல்லாம் ரித்திகா பாலாவை காதலிக்கிறார் என செய்திகள் பரவத் தொடங்கியது.



இந்த தகவல்களுக்கு ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் லைவில் முதன்முறையாக பதில் அளித்துள்ளார். அண்மையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ்வில் கலந்துரையாடிய அவர், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகவும், தன் மனதில் பட்டதையும் வெளிப்படையாக பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் பாலாவை காதலிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.



அந்த கேள்விக்கு பதில் அளித்த ரித்திகா," நானும் பாலாவும் நல்ல நண்பர்கள், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். நண்பர்களாகவே இருக்கிறோம். நிகழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் பர்ஃபாமென்ஸ் செய்வது மக்களுக்கு பிடித்திருக்கிறது. அதனை நாங்களும் விரும்புகிறோம். ரீல் லைஃப் வேறு, ரியல் லைஃப் வேறு. மக்களை என்டர்டெயின் செய்வது மட்டுமே எங்களின் ஒரே நோக்கம். ரசிகர்களும் அப்படியே பார்க்க வேண்டும். எப்போதும் அன்பாகவும், நேர்மறையாகவும் இருப்பது பிடிக்கும். நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்" என கூறினார்.



கோவை சரளா வாய்ஸ் சூப்பராக இருந்தது எனத் தெரிவித்த ரசிகருக்கு நன்றி தெரிவித்த ரித்திகா, மற்றொரு ரசிகரின் வேண்டுகோளுக்கு இணங்க ‘ நீயும் நானும் சேர்ந்தே செல்வோம்’ என்ற பாடலை சூப்பராக பாடிக் காட்டினார். பாலாவிடம் பிடித்தது என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மிகவும் ஹார்ட்வொர்க்கர் எனக் கூறினார். கடவுளை வேண்டிக் கொண்டே இருப்பார் எனவும் குறிப்பிட்டார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் முதல் லைவ் செஷன் மிகவும் நம்பிக்கையாக இருந்ததாக தெரிவித்த அவர், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் கேள்விகளுக்கும் உகந்த பதிலை கொடுத்ததில் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார். விரைவில் அடுத்தடுத்த லைவ்வில் சந்திக்க இருப்பதாகவும் ரித்திகா தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: