'சிலர் என் பேர கெடுக்குறாங்க’ குக் வித் கோமாளி பவித்ரா வெளியிட்ட வீடியோ
ஒன்றும் தெரியாத கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க போட்டியாளர்கள் படும் பாடு தான் இந்த ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி.

பவித்ரா லட்சுமி
- News18 Tamil
- Last Updated: January 22, 2021, 5:56 PM IST
தனது பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவதாக ’குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா லட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. சமையலுடன் சேர்ந்து, காமெடியையும் இந்நிகழ்ச்சியில் கண்டு களிக்கலாம். ஒன்றும் தெரியாத கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க போட்டியாளர்கள் படும் பாடு தான் இந்த ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி.
இதில் போட்டியாளர்களுக்கும், கோமாளிகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கலந்துக் கொண்டுள்ள பவித்ரா லட்சுமிக்கும் நிறைய ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். இளம் நடிகையான பவித்ரா, சமையலிலும் கில்லியாக இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். "சில டிவிட்டர் பக்கங்கள் என்னுடையது போலவே ஆக்டிவாக இருக்கிறது. ட்விட்டரில் எனக்கு கணக்கு இருந்தாலும், நான் அதிக ஆக்டிவாக இல்லை. இன்ஸ்டாகிராமில் தான் நான் அதிக ஆக்டிவாக இருக்கிறேன். அதை ஒரு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் என் பெயரை கெடுக்க பார்க்கிறார்கள். 200% அதற்கு நான் பொறுப்பல்ல. இதுதான் என்னுடைய ஒரிஜினல் ட்விட்டர் பக்கம். உங்களுடைய அன்புக்கு நன்றி" என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

This is my only twitter handle pic.twitter.com/BWBKIbFTs4
— pavithralakshmi (@itspavitralaksh) January 21, 2021