குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து தற்போது மூன்றாவது சீசன் கலக்கலாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் போட்டியாளர்களாக அம்மு அமிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஸ்பெஷலே கோமாளிகள் செய்யும் கலாட்டாக்களும், காமெடிகளும் தான். குக்குகளுக்கும், கோமாளிக்கும் இடையே வித்தியாசமான டாஸ்குகளை கொடுப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு கொளுத்தி போடுவது முதல் அடி பின்னி எடுப்பது வரை செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் தீயாய் வேலை செய்கின்றனர். செட்டில் கோமாளிகள் செய்யும் சேட்டைகளை விட அவர்களிடம் இவர்கள் இருவரும் செய்யும் சேட்டைகளும், கிண்டல்களும் அதிகம். சமீபத்தில் நடந்த விஜய் டிவி விருது விழாவில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோருக்கு ட்ரெண்டிங் Pair என்கிற விருது வழங்கபட்டத்து.
அந்த அளவுக்கு அவர்களுக்கு சின்னத்திரையில் ரசிகர்கள் கூடி இருக்கிறார்கள்.குறிப்பாக வெங்கடேஷ் பட் கோமாளிகளை அடிப்பது குறித்து கடும் விமர்சனம் வெளியானது. அதற்கு அவரும் விளையாட்டாக தான் கோமாளிகளை அடிப்பதாகவும் யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் சீசன் 3 தொடங்குவதற்கு முன்னால் தெரிவித்திருந்தார்.
Also Read : செம்ம கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட யாஷிகா ஆனந்த்..
வெங்கடேஷ் பட் சமையல் கலைஞர், குக் வித் கோமாளி ஜ்ட்ஜ் என்பது மட்டுமின்றி ‘சவுத் இன்டீஸ்’, ‘யுபி சவுத்’, ‘பான் சவுத்’ ஆகிய பெயர்களில் இந்தியா முழுவதும் 14க்கும் மேற்பட்ட ரெஸ்டாரன்ட்களை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி பிரபல நட்சத்திர ஓட்டலில் தலைமை பொறுப்பில் இருக்கிறார். விஜய் டி.வி. பிரபலங்களைப் போலவே வெங்கடேஷ் பட்டும் யூ-டியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரக்கூடிய நபர். என்னதான் வாரம் முழுவதும் பிசியாக ஓடினாலும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவதற்கு மறந்தது கிடையாது.
இந்நிலையில் வெங்கடேஷ் பட் மகளுடன் ஜாலியாக ஆட்டம் போட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. செஃப் வெங்கடேஷ் பட் இன்ஸ்டாகிராமில் தனது மகள் உடன் துபாயில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஆங்கில பாடல் ஒன்றிற்கு அதில் மகளுடன் சேர்ந்து நடனமாடி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.