• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Cooku With Comali : விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொண்டாட்டம் - வைரல் புகைப்படம்!

Cooku With Comali : விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொண்டாட்டம் - வைரல் புகைப்படம்!

cooku with comali

cooku with comali

குக் வித் கோமாளி 2 கொண்டாட்ட நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். பிக் பாஸ், ஜோடி, சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி என பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளது. இதனால் விஜய் டிவிக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்தவகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 2 மிகவும் பிரபலமானது. ஊரடங்கு காலத்தில் மக்கள் ரசித்து பார்த்த ஷோவாக குக் வித் கோமாளி புகழ் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, சக்தி ஆகியோர் இருந்த நிலையில், இவர்களின் நகைச்சுவை மிகவும் பிரபலமானது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சிவாங்கி. இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெரியளவில் பிரபலமானார். ஷிவாங்கி, புகழ் நிகழ்ச்சியின் போது செய்த நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதால் இருவரும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி, அஸ்வின் ஜோடிக்கென தனி ரசிர்கள் கூட்டம் இருந்தது.

cook with comali finals ashwin emotional note for sivaangi

வெகு விமர்சையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் கனி, சகிலா, அஸ்வின் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இந்த நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்த நிலையில் அனைவரும் புகழ் பெற்று திரைப்பட வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். ஷிவாங்கிக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்திருக்கிறது. தற்போது இவர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். டான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்று வருகிறது. நடிகர் அஸ்வின் ஆல்பம் பாடல்களில் நடித்த நிலையில் சமீபத்தில் அவரது குட்டி பட்டாஸ் பாடல் சுமார் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. மேலும் புதிய படத்தில் நடிகராகவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த அஸ்வினுக்கு அதிகளவில் ரசிகைகளும் உள்ளனர்.

Also Read :வேணு அரவிந்தின் உடல் நிலை எப்படி இருக்கு? நடிகை ராதிகா கொடுத்த அப்டேட்..



 

இந்த நிலையில் பிக்பாஸ் 5வது சீசன் அக்டோபர் இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியான நிலையில், தற்போது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி நவம்பரில் தொடங்கும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : ஸ்ருதிஹாசன் வயிற்றில் சாக் பீஸால் எழுதிய காதலன் - வைரல் வீடியோ



 




View this post on Instagram





 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)





இதனிடையே குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, குக் வித் கோமாளி 2 கொண்டாட்ட நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. அதில் அஸ்வின் மற்றும் ரித்விகாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த சீசனை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: