அஸ்வினுக்கு லவ் புரபோஸல் - வயிற்றெரிச்சலில் சிவாங்கி

அஸ்வினுக்கு லவ் புரபோஸல் - வயிற்றெரிச்சலில் சிவாங்கி

குக் வித் கோமாளி

கோமாளிகளுக்கு டோரா, சோட்டா பீம், ஸ்பைடர் மேன் போன்ற வேடங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  இதில் நடன இயக்குனர் பாபா பாஸ்கர், நடிகைகள் ஷகீலா, பவித்ரா லக்ஷ்மி, ரித்திகா, நடிகர் அஸ்வின் உள்ளிட்டோர் குக்குகளாகவும், சிவாங்கி, புகழ், சுனிதா, மணிமேகலை, பாலா, சரத் உள்ளிட்டோர் கோமாளிகளாகவும் பங்கேற்றுள்ளனர்.

  ”ரசிகர்களுடன் படம் எடுத்துக் கொள்ளும் போது விஜய்யைப் பற்றி நினைத்தேன்…” பிரியங்கா சோப்ரா!

  கவலைகளை மறந்து மனம் விட்டு சிரிக்கும் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக, ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி. குறிப்பாக போட்டியாளர் அஸ்வினுக்கு இந்நிகழ்ச்சியில் செம டிமாண்ட். அவரை இம்ப்ரெஸ் செய்ய ஒரு பக்கம் சிவாங்கியும், மறுபுறம் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்வார்கள்.  இந்நிலையில் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் கோமாளிகளுக்கு டோரா, சோட்டா பீம், ஸ்பைடர் மேன் போன்ற வேடங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஸ்பைடர்மேன் வேடம் போட்டிருக்கும் சுனிதா, ”நான் ஸ்பைடர்மேனா இருந்தாலும், என்னோட சூப்பர்மேன் நீங்க தான்” என ஒரு கொத்து சிவப்பு ரோஜாக்களை அஸ்வினிடம் கொடுத்து ப்ரொபோஸ் செய்கிறார். இதைப்பார்த்த சிவாங்கி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அவரது வயிறு எரிந்து, காது வழியாக புகை வருவது கண்கூடாகவே தெரிகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: