ஒரே மாதிரி ஆடையில் மகளுடன் போட்டோ ஷூட் செய்த ஷகிலா - வைரல் புகைப்படங்கள்

ஷகிலா-மிளா

நடிகை ஷகிலா தனது மகளுடன் போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை மிளா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

  • Share this:
நடிகை ஷகிலாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமான இவர், முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் ஒரு சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். பின்னர் மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், தவிர்க்க முடியாமல் கவர்ச்சி பக்கம் திரும்பினார். இவர் நடித்த கவர்ச்சி திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த நிலையில், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல ஷோவான குக் வித் கோமாளியின் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி கவர்ச்சி நடிகையாக இருந்த ஷகிலாவை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது. அந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் ஷகிலாவை அம்மா என பாசமாக அழைத்ததனால், ரசிகர்களும் ஷகிலா அம்மா என கூறும் அளவிற்கு புகழ் பெற்றார். இதனால் அவர் மீது இருந்த கவர்ச்சி நடிகை என்ற தோற்றம் முற்றிலும் காணாமல் போனது.

நடிகை ஷகிலா , ஆனால் அவர் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வருவதை பார்க்க முடிகிறது. சமீபத்தில் மிளா யார் என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நடிகை ஷகிலா, "இது என்னுடைய மகள் மிளா. இவர் இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை. என்னுடைய நிறைய ஏற்றத்தாழ்வுகளில் எனக்கு துணையாக இருந்தவர். அதேபோல் அவருடைய ஏற்றத் தாழ்வுகளிலும் நான் துணையாக இருந்திருக்கிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் தற்போது ஷகிலா மற்றும் மற்றும் மிளா ஒன்றாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்னனர். அதில் ஷகிலா, மேனகாவாகவும், மிளா சகுந்தாலாவாகவும் கெட்டப் போட்டு அசந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

நேற்று மீண்டும் இருவரும் கருப்பு நிற உடையணிந்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை மிளா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

 
இருவரும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மிளா பேஷன் டிசைனராக இருக்கிறார். முன்னதாக அவர் சீரியல்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் மிக பிரபலமாகியுள்ளார். இவரை தற்போது ஷகிலாவுடன் பெரும்பாலான இடங்களில் பார்க்க முடிகிறது. மேலும் இருவரும் ஒன்றாக பேட்டிகளும் கொடுத்து வருகின்றனர். இதனால் தற்போது இவர்களுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: