முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆஹா.. இந்த முறை குக் வித் கோமாளி எபிசோட் களைக்கட்டும் போலயே... ஷிவாங்கி என்ன செஞ்சியிருக்காங்க பாருங்க!

ஆஹா.. இந்த முறை குக் வித் கோமாளி எபிசோட் களைக்கட்டும் போலயே... ஷிவாங்கி என்ன செஞ்சியிருக்காங்க பாருங்க!

cook with komali shivangi | இந்த முறை வித்தியாசமாக குக்குகள் மற்றும் செஃப்களின் கெட்டப்புகளில் கோமாளிகள்

cook with komali shivangi | இந்த முறை வித்தியாசமாக குக்குகள் மற்றும் செஃப்களின் கெட்டப்புகளில் கோமாளிகள்

cook with komali shivangi | இந்த முறை வித்தியாசமாக குக்குகள் மற்றும் செஃப்களின் கெட்டப்புகளில் கோமாளிகள்

  • Last Updated :

இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் நிகழ்ச்சியின் எபிசோட் வேறலெவலுக்கு கலகலப்பாக இருக்க உள்ளது. செஃப் தாமுவாக மாறிய ஷிவாங்கி, ஸ்ருத்திகா கெட்டப்பில் குரோஷி என அதிரிபுதிரி காம்பினேஷன் உடன் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் தொடங்கி டான்ஸ், பாட்டு, காமெடி, ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ என அனைத்திற்குமே தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆனால் இவர்கள் அனைவருமே ஒன்றாக என்ஜாய் செய்து பார்க்கும் நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’யாக தான் இருக்கும். சமையல் நிகழ்ச்சியில் காமெடி கலாட்டாவை சேர்த்து வெளியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து தற்போது மூன்றாவது சீசன் கலக்கலாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

Read More : வருங்கால மனைவியுடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய நவீன்..

இதில் போட்டியாளர்களாக அம்மு அமிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஸ்பெஷலே கோமாளிகள் செய்யும் கலாட்டாக்களும், காமெடிகளும் தான். அதை மேலும் அதிகரிக்கும் வகையில் வாராவாரம் கோமாளிகளுக்கு விதவிதமான கெட்டப்புகளை கொடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அசத்தி வருகின்றனர். இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பாத்து காத்திருந்த கோமாளிகள் கெட்டப் தொடர்பான புரோமோ வீடியோவை விஜய் டி.வி. வெளியிட்டுள்ளது.

இந்த முறை வித்தியாசமாக குக்குகள் மற்றும் செஃப்களின் கெட்டப்புகளில் கோமாளிகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக குக் வித் கோமாளி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த செல்லக்குட்டியான ஷிவாங்கி, செஃப் தாமுவாக மாறியிருக்கிறார். வெள்ளை நிற செஃப் உடையில் தாமுவைப் போலவே நடை, உடை, பாவனை என அனைத்திலும் அசத்தியிருக்கிறார் ஷிவாங்கி. அதே போல், ஸ்ருதிகா போல் குரேஷி கெட்டப் போட்டுள்ளார். குரேஷியும் ஸ்ருத்திகாவைப் போலவே நடை, உடை பாவனையில் அசத்தியிருக்கிறார்.

' isDesktop="true" id="734554" youtubeid="2RhiUmzmk9o" category="entertainment">

மேலும் இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் குக்குகள் சமைத்தால் மட்டும் போதாது, அதை சாப்பிட்டும் பார்க்க வேண்டும் என்ற போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. பஜ்ஜி சுடும் போட்டியை அறிவித்துள்ள நடுவர்கள், அதனை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்பது போன்ற போட்டியையும் அறிவித்துள்ளனர்.

top videos

    குக்குகள் தாங்கள் சுட்ட பஜ்ஜியை மிகவும் கஷ்டப்பட்டு, சாப்பிடும் காட்சிகளும் புரோமோ வீடியோவில் இடம் பெற்று கலகலப்பாக்குகிறது. தற்போது சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலாகி வருவதோடு, எபிசோட் எப்போது ஒளிபரப்பாகும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எகிறவைத்துள்ளது.

    First published:

    Tags: Cook With Comali Season 2, Entertainment, Singer Shivangi, Vijay tv