விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். பிக் பாஸ், ஜோடி, சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி என பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளது. இதனால் விஜய் டிவிக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்தவகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 2 மிகவும் பிரபலமானது. ஊரடங்கு காலத்தில் மக்கள் ரசித்து பார்த்த ஷோவாக குக் வித் கோமாளி புகழ் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, சக்தி ஆகியோர் இருந்த நிலையில், இவர்களின் நகைச்சுவை மிகவும் பிரபலமானது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சிவாங்கி. இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெரியளவில் பிரபலமானார். ஷிவாங்கி, புகழ் நிகழ்ச்சியின் போது செய்த நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதால் இருவரும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகினர்.
வெகு விமர்சையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் கனி, சகிலா, அஸ்வின் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இரண்டாவது சீசன் தற்போது முடிவடைந்த நிலையில், மூன்றாவது சீசனுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் சேர்ந்து கோமாளிகள் செய்யும் சேட்டைக்கு சிரித்து சிரித்து உங்கள் வயிறு புண்ணாகும். அடுத்த சீசனில் யாரெல்லாம் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் குக் வித் கோமாளின் சீசன் 2 வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி இந்த வாரம் ஞாயிற்றுகிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் அனைத்து கோமாளிகளும், குக்குகளும் கலந்து கொள்கின்றனர். நடுவர்கள் அட்வான்டேஜ் டாஸ்க் கொடுக்கின்றனர். அதில் இதய வடிவில் தோசை சுட சொல்கின்றனர். கோமாளிகளின் கண்ணை கட்டிக் கொண்டு தோசை சுடும் காமெடி கலந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் ‘ரகிட ரகிட’ பாட்டிற்கு கோமாளிகளும், குக்குகளும் நடனம் ஆடுகின்றனர். மேலும் இப்போதும் அஸ்வினுக்கு ஜோடியாக ஷிவாங்கி வருகிறார். எனது மனதில் இருப்பதை அப்படியே தோசையாக சுட போகிறேன் என அவர் கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதற்கு மிக்கி மவுஸ் போல இருப்பதாக நடுவர் வெங்கடேஷ் கமெண்ட் செய்கிறார். சீசன் 2 வெற்றி கொண்டாடட்டம் நிகழ்ச்சி மீண்டும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அனைத்து கோமாளிகளும் வித்தியாசமான கெட்அப் உடன் கலந்து கொண்டுள்ளனர். எனவே குக் வித் கோமாளி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.