தளபதி 65-ல் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்?

நடிகர் விஜய்

அவர் ஏற்கனவே அஜித்தின் 'வலிமை' மற்றும் ஹரி இயக்கும் அருண் விஜய்யின் படம் ஆகியவற்றில் இணைந்திருக்கிறார்.

 • Share this:
  தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இப்படம் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் அனிருத்தின் இசையும், விஜய்யின் நடிப்பும், விஜய் சேதுபதியின் வில்லத்தனமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

  இதற்கிடையில், விஜய் தற்போது தனது அடுத்த படமான 'தளபதி 65' முதற்கட்ட பணிகளில் பிஸியாக உள்ளார். இதன் படப்பிடிப்பு சில வாரங்களில் தொடங்கவிருக்கிறது. பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தன்னா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், யோகி பாபு ஏற்கனவே ஒப்பந்தமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

  குட்டி ஸ்டோரி படத்தின் ’ஸ்னீக் பீக்’ வீடியோ!

  இப்போது கோலிவுட்டில் பரபரப்பான செய்தி என்னவென்றால், 'குக்கு வித் கோமாளி' பிரபலம் புகழ் 'தளபதி 65'-ல் இணைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அவர் ஏற்கனவே அஜித்தின் 'வலிமை' மற்றும் ஹரி இயக்கும் அருண் விஜய்யின் படம் ஆகியவற்றில் இணைந்திருக்கிறார்.

  'தளபதி 65' படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: