1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற குக் வித் கோமாளி அஸ்வின்!

1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற குக் வித் கோமாளி அஸ்வின்!

அஸ்வின் குமார்

”1 மில்லியன் இதயங்கள்... இது எனக்கு எளிதானது அல்ல.”

 • Share this:
  பிரபல மாடலும், குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளருமான அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன், தனது இன்ஸ்டாகிராமில் வெற்றிகரமாக ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களைப் பெற்றுள்ளார்.

  இது குறித்து மகிழ்ச்சியடைந்த அஸ்வின், ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் தனது நன்றியை தெரிவித்தார். ”1 மில்லியன் இதயங்கள்... இது எனக்கு எளிதானது அல்ல. நீங்கள் அனைவரும் இதைச் செய்தீர்கள் & அதன் மதிப்பு எனக்குத் தெரியும். உங்களை மகிழ்விக்க எனது சிறந்ததை தருவேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
  இந்த சாதனைக்கு அஸ்வின் குமாரையும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். அஸ்வின் குமாரின் நண்பர் புனித், ஒரு சிறப்பான கேக் மூலம் அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்தக் கொண்டாட்டங்களின் ஒரு காட்சியைப் பகிர்ந்த புனித், “புன்னகைக்க ஒரு மில்லியன் காரணங்கள்... அதனால் இது நடந்தது. இது அஸ்வினுக்காக மட்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.   
  View this post on Instagram

   

  A post shared by Punith (@i_am_punith)


  இந்த படங்களில், அஸ்வின் குமாரின் நண்பர்களான மணிமேகலை, கனி திரு, வி.ஜே.ரக்‌ஷன், சிவாங்கி, புனித், பவித்ரா, பாலா உள்ளிட்டோர் இருக்கின்றனர். ரெட்டை வால் குருவி (பாலமுருகன்) மற்றும் நினைக்க தெரிந்த மனமே (அரவிந்த்) ஆகிய சீரியல்களில் அஸ்வின் நடித்தது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: