பா.ரஞ்சித்துடன் அரசியல் பேசினேன் - ராகுல் காந்தி ட்வீட்

news18
Updated: July 11, 2018, 2:02 PM IST
பா.ரஞ்சித்துடன் அரசியல் பேசினேன் - ராகுல் காந்தி ட்வீட்
ராகுல் காந்தியுடன் பா.ரஞ்சித்
news18
Updated: July 11, 2018, 2:02 PM IST
தமிழில் பிளாக் பஸ்டர் படங்களை இயக்கிய பா.ரஞ்சித்தை சந்தித்ததாகவும், அவருடன் அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்கள் குறித்து உரையாடியதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  கூறியுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்திக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, நேற்று டெல்லியில் ராகுல் காந்தியை இயக்குனர் பா.ரஞ்சித் நேரில் சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது பேசிய ராகுல்காந்தி சமீபத்தில் காலா திரைப்படத்தை பார்த்ததாகவும் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சாதி, மதம் போன்ற பிரிவினைகளை ஒழிக்க காலா, கபாலி, மெட்ராஸ் மாதிரியான திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை தரும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இறுதியாக பா.ரஞ்சித், பேரறிவாளன் விடுதலை குறித்து ராகுல் காந்தியிடம் பேசியதாகவும், அதற்கு அவர் பேரறிவாளன் விடுதலையில் நாங்கள் ஒரு தடையாக இருக்கமாட்டோம் எனவும் தன்னால் முடிந்தவரை அவருக்கு உதவி செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “மெட்ராஸ், கபாலி, காலா போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களின் இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை டெல்லியில் சந்தித்தேன். ரஞ்சித்துடன் அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினேன். அவரோடு பேசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உரையாடல் தொடரும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

I met film director P A Ranjith the man behind blockbuster films like Madras, Kabali and Kaala and actor Kalaiyarasan, in Delhi yesterday. We talked about politics, films and society. I enjoyed the interaction and look forward to continuing our dialogue. pic.twitter.com/KJOmfICkyJ
Loading...
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...