இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து

இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து

சித்தார்த் விபின் திருமண புகைப்படம்

இசையமைப்பாளரும் நடிகருமான சித்தார்த் விபினுக்கும் ஸ்ரியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

  • Share this:
2013-ம் ஆண்டு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் நந்திதாவின் நண்பராக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த் விபின். மேலும் அத்திரைப்படத்துக்கு இசையமைத்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஒரே படத்தில் சித்தார்த் விபின் நடிப்பும், இசையும் பேசப்பட்டது.

அதைத்தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், காஷ்மோரா, ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட பல படங்களில் நடிகராகவும் இசையமைத்தும் வருகிறார். இந்நிலையில் இவருக்கும் ஸ்ரியா என்ற பெண்ணுக்கும் கேரளத்து ஸ்டைலில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண புகைப்படத்தை பதிவிட்டு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


சித்தார்த் விபினின் நெருங்கிய நண்பரும் நடிகருமான நகுல், “இன்று எங்களுக்கு ஸ்பெஷலான நாள். என்னுடைய சகோதரர். எனது குழந்தையின் காட்ஃபாதர், மிகத்திறமை வாய்ந்த இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கும் ஸ்ரியாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்தோம். இருவரும் அன்பு மகிழ்ச்சி மற்றும் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் சித்தார்த் விபின்.
Published by:Sheik Hanifah
First published: