முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பிறந்த நாள் இன்று: அவரின் இசைப்பயணம் ஒரு பிளாஷ்பேக்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பிறந்த நாள் இன்று: அவரின் இசைப்பயணம் ஒரு பிளாஷ்பேக்!

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்

பொறியியல் முடித்த பட்டதாரியான சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் பல இசையமைப்பாளர்களிடம் இசை பொறியாளராக பணியாற்றி உள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்றைய தினத்தில் அவரின் இசை பயணத்தை தற்பொழுது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் most-wanted இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணனை கண்டால் வர சொல்லுங்கள், கையோட கூட்டி வாருங்கள் என பல இயக்குனர்களும் இன்று தேடும் அளவிற்கு தமிழ் சினிமாவில் பிஸியாக வலம் வருகிறார் சந்தோஷ் நாராயணன்.

தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்தை அடைந்த இசையமைப்பாளர்கள் பலரும் அறிமுகமாகும் முதல் படத்திலேயே பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவார்கள் அன்னக்கிளியில் இளையராஜா, ரோஜாவில் ரகுமான், வெயில் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ்,, 3 படத்தில் அனிருத் என முதல் படம் சொல்லிவிடும் இசையமைப்பாளரின் தரம் என்ன என்பதை, அந்த வரிசையில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தனது வீச்சை முதல் திரைப்படத்திலேயே பதிவு செய்தார் சந்தோஷ் நாராயணன். அடுத்து வந்த பீட்சா, சூது கவ்வும், குக்கூ ஆகிய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் ஒரு மாறுபட்ட இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இருப்பார் என்பதை பறைசாற்றின.

பொறியியல் முடித்த பட்டதாரியான சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் பல இசையமைப்பாளர்களிடம் இசை பொறியாளராக பணியாற்றி உள்ளார். அந்த வகையில் ஏ ஆர் ரஹ்மானிடம்  குரு திரைப்படத்தில் சில பாடல்களில் பணியாற்றிய சந்தோஷ் நாராயணன், இளையராஜாவின் மண் மணம் மாறாத இசையை ஏ ஆர் ரகுமானின் தொழில்நுட்ப வீச்சுடன் ரசிகர்களின் காதுகளில் தேனாய் படைக்கும் ஆற்றலை ஒருங்கே பெற்றார்.

' isDesktop="true" id="464245" youtubeid="eYq7WapuDLU" category="entertainment">

திரைப்பாடல்களை கடந்து தனது நேர்த்தியான இசையால் கதைக்கு வலு சேர்த்து திரைப்படங்களை வெற்றி பெறச் செய்யும் சந்தோஷ் நாராயணனை தேடி விஜயின் பைரவா, ரஜினியின் கபாலி, காலா ஆகிய தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் திரைப்படங்கள் கதவை தட்ட தமிழ் முக்கிய முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார் சந்தோஷ் நாராயணன். ஏறத்தாழ 15 ஆண்டுகளாக ஏ ஆர் ரகுமான் இசையில் மட்டும் நடித்து வந்த ரஜினிகாந்த் முதல் முறையாக கபாலி திரைப்படத்திற்காக ஏ ஆர் ரகுமான் கூட்டணியை விட்டு வெளியேறி சந்தோஷுடன் கரம் கோர்த்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

' isDesktop="true" id="464245" youtubeid="HpfYhGRHQb0" category="entertainment">

Read More:   வீடியோ மூலம் வைரலான கொரோனா பாதித்த இளம் பெண் மரணம் - அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

திரைப்படத்தில் பிஸியான இசையமைப்பாளராக இருந்தாலும், இசை உலகில் புதுமைகள் படைப்பதில் ஆர்வம் கொண்ட சந்தோஷ் நாராயணன் ஏ ஆர் ரகுமான் யூடியூப் சேனலுக்காக அன்மையில் உருவாக்கிய என்சாயி என்சாமி உள்ளிட்ட சுதந்திர இசை பாடல்களும் சக்கை போடு போடுகின்றன.

' isDesktop="true" id="464245" youtubeid="bwXHx8ng7_E" category="entertainment">

இதுவரை 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணன் 30 திரைப்படத்திலும் பெயர் சொல்லும்படியான வெற்றியை பதிவு செய்துள்ளதுடன், அடுத்தடுத்து ஜகமே தந்திரம், விக்ரம் 60, சார் பேட்ட பரம்பரை தமிழ் சினிமாவின் அடுத்த ஹிட் நம்பர்களுடன் வெற்றிக் கொடியை ஒய்யாரமாக உயரமாக பறக்க காத்துக்கொண்டு உள்ளார்.

First published:

Tags: Happy BirthDay, Music director