• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குறிப்பிட்ட சாதிப் பேரைச் சொல்லி இழிவான பேச்சு - மீரா மீதுன் மீது காவல்நிலையங்களில் அடுக்கடுக்கான புகார்

குறிப்பிட்ட சாதிப் பேரைச் சொல்லி இழிவான பேச்சு - மீரா மீதுன் மீது காவல்நிலையங்களில் அடுக்கடுக்கான புகார்

காவல்துறையில் புகார்

காவல்துறையில் புகார்

சாதிப் பெயரைச் சொல்லி இழிவாக பேசியதால் மீரா மிதுன் மீது காவல் நிலையத்தில் அடுக்கடுக்கான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தும், அழகி போட்டிகளில் பங்கெடுத்தும் அறியப்பட்டவர் மீரா மிதுன். சர்ச்சையான கருத்துக்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தி அதன் காரணமாக மீரா மிதுன் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதியப்பட்டு இருப்பதும் இவருக்கு புதியதல்ல.

இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் சில தினங்களுக்கு வீடியோ ஒன்றை யூட்யூப்பில் பதிவிட்டார். அதில், குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குறிவைத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகளை குறித்து கொச்சையாகப் பேசியும், அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தார். மேலும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் தூற்றுகின்றனர் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மீரா மிதுனின் இப்பதிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில் புரட்சி பாரதம் கட்சியினர் சார்பில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை, திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரில் குறிப்பிட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களை கொச்சையாகப் பேசி சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் மீரா மிதுன் மீது சாதி வன்கொடுமைப் பிரிவின் கீழும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்காக IT பிரிவின் கீழும் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

இந்நிலையில் மீரா மிதுன் மிது அளிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்களை அவதூறாக பேசியதற்காக அவர்களின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர்.

அந்த வகையில் சென்னை எம்.கே.பி காவல்துறையினர் மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததும் அதே போல சமூக வலைதளங்களில் தனிநபர் தாக்குதல் நடத்தியதாக கேரளாவில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதும், கடந்த 2019ஆம் ஆண்டு எழும்பூர் போலீசார், மீராமிதுன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் தற்போது சாதிய ரீதியாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளதால், சமூக வலைதளங்களில் பலர் மீராமிதுன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: