முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்!

தளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம், கொரோனா லாக்டவுனால் தாமதமானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் 66 படத்தை இயக்ககுபவர்களில், இயக்குநர்கள் சிவா மற்றும் ஹெச்.வினோத்தின் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.

நடிகர் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா லாக்டவுனால் தாமதமானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியிருந்தார்.

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்த்னு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். மாஸ்டர் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸுடன் இணைந்து எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு இசை அனிருத். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் அடுத்த படமான விஜய் 65 படத்தை நெல்சன் தீலிப் இயக்குகிறார்.

இந்நிலையில்  மாஸ்டர் வெளியாக தாமதமானதால் தயாரிப்பாளர் லலித் பாதிக்கப்பட்டுள்ளாராம். அதனால் அவருக்காக விஜய் 66 படத்தை  நடித்துக் கொடுக்க விஜய் முடிவு செய்து இருக்கிறாராம். இந்தப் படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் இயக்குநர்கள் சிவா மற்றும் ஹெச்.வினோத்தின் பெயர்கள் பரிந்துரையில் இருக்கிறதாம். இவர்களில் யார் விஜய் படத்தை இயக்குவது என்பதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. தொடர்ந்து அஜித்தின் 4 படங்களை இயக்கிய சிவா, தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வருகிறார். ஹெச். வினோத்தும் அஜித்துடன் தனது இரண்டாவது படமான ‘வலிமை’யில் பிஸியாக இருக்கிறார்.

இதற்கிடையே விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor vijay, Director siva, Master, Vinoth