நயன்தாராவுடன் மீண்டும் இணைந்த 'சேகர் மளிகை கடை' ஓனர் சேகர்!

யோகிபாபு மற்றும் நயன்தாரா

 • News18
 • Last Updated :
 • Share this:
  கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நயன்தாராவுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர் யோகி பாபு தற்போது லஷ்மி குறும்பட இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஐரா படத்திலும்  ஒப்பந்தமாகியுள்ளார்.

  லட்சுமி , மா ஆகிய இரண்டு குறும்படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கே.எம்.சர்ஜூன் தற்போது வெள்ளித் திரையிலும் படங்களை இயக்கி வருகிறார். வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ், கிஷோர், யோகி பாபு, ஆகியோர் நடித்த ’இது மனிதர்கள் வாழும் இடம்’ என்ற படமே கே.எம்.சர்ஜூனின் முதலாவது படம் ஆகும். இதையடுத்து நயன்தாராவின் 63-வது படத்தை இயக்குனர் சர்ஜூன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு கடந்த 9-ம் தேதி ’ஐரா’ என்று பெயர் சூட்டப்பட்டது.

  முதன்முறையாக இரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கோலமாவு கோகிலா படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகளும் பாடலும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் யோகி பாபு நயன்தாராவை பார்த்து பாடும் ’’எனக்கு கல்யாண வயசு தான் வந்துருச்சுடி லவ் பண்ணவா’’ என்ற பாடல் ஹிட் அடித்தது.  இந்நிலையில் இந்த கூட்டணி ஐரா படத்தில் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  அறம் படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் ஐரா படத்தையும் தயரித்து வருகிறது. இந்த படத்தில் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என தகவல்கள் வெளியகியுள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: