ஆஸ்திரேலிய பறவைக்கு நாயகனான யோகி பாபு!

காக்டெய்ல் பறவையுடம் நடிகர் யோகி பாபு

கைவசம் 19 படங்கள் உள்ள நிலையில் தற்போது, ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள காக்டெயில் என்ற படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்க உள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
’காக்டெய்ல்’ என்ற புதிய படத்தில் ஆஸ்திரேலிய பறவையுடன் இணைந்து நடிக்கிறார் காமெடி நடிகர் யோகி பாபு.

சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. காமெடி மட்டுமின்றி அவரது உருவ அமைப்பும் மக்களுக்கு பிடித்துப் போக தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகும் படங்களில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

பல முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களில் நடித்து வந்த யோகிபாபு சர்கார் படத்தை தொடர்ந்து தளப்தி 63 படத்திலும் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் யோகி பாபு தற்போது தர்மபிரபு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.  இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும்  வரவேற்பை பெற்றுள்ளது.

கைவசம் 19 படங்கள் உள்ள நிலையில் தற்போது, ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள காக்டெயில் என்ற படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்க உள்ளார்.

மதுரை வீரன் படத்தின் இயக்குனரும், லிசா, டேனி ஆகிய படங்களின் தயாரிப்பாளருமான பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா காக்டெயில் படத்தை இயக்க உள்ளார்.

இதில்  யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

Also see...


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vinothini Aandisamy
First published: