ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

”நேசத்தின் நெஞ்சங்களுக்கு பாசத்தின் நன்றிகள்” - பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் வடிவேலு

”நேசத்தின் நெஞ்சங்களுக்கு பாசத்தின் நன்றிகள்” - பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

நேற்று நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துரைத்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நேசத்தின் நெஞ்சங்களுக்கு பாசத்தின் நன்றிகள்” என்றும் ”விரைவில் உங்களை மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், செப்டம்பர் 12 என்னுடைய பிறந்தநாள். நான் தினமும் மக்களை சிரிக்க வைப்பதால் ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக நான் தினமும் பிறந்துகொண்டுதான் இருக்கிறேன். என்னைப் பெற்ற அம்மாவுக்கு முதலாவதாக நான் நன்றி சொல்கிறேன் என்றார்.

  தொடர்ந்து பேசிய அவர், மக்கள் சக்தி இல்லையென்றால் வடிவேலுவே கிடையாது. என் அம்மாவுக்குப் பிறகு எனக்கு மக்கள்தான். அதனால்தான் மக்களை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.

  திரைப்படங்களில் நடிப்பது குறித்து கருத்து கூறுகையில், சீக்கிரமே மிகப் பெரிய என்ட்ரீயோடு வருவதாகக் கூறிய அவர், வாழ்க்கையென்றால் எங்கே இருந்தாலும் சைத்தான் சனியன் எல்லாம் இருக்கத்தான் செய்யும். எல்லோர் வாழ்க்கையிலும் அவை உண்டு. என் வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் இருக்குமா என அவருக்கே உரிய நகைச்சுவை ததும்ப கூறினார்.

  Published by:Rizwan
  First published:

  Tags: Actor Vadivelu